கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ பி எல் தொடர் இன்னும் சிறிது நேரத்தில் கோலாகமலாக துவங்க இருக்கிறது. கொரோனா பிரச்சனை காரணமாக இந்த சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு சென்ற நிலையில் சமீபத்தில் தான் ஐ பி எல் தொகுப்பாளர்களான முத்து, ஆர் ஜே பாலாஜி, பாவனா போன்றவர்கள் சென்றடைந்தனர். ஆனால், ஐபிஎல் ரசிகர்களின் கனவு வர்ணனையாளரான மாயந்தி லாங்கர் இந்த ஐபிஎல் தொடரில் இல்லை என்ற செய்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஐபிஎல் போட்டிகள் துவங்கும் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அந்த போட்டி குறித்த தொகுப்பாளர்களின் பேச்சுகள் துவங்கிவிடும். தொகுப்பாளர்களின் பேச்சுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் அடையாளம் காணப்பட்டவர்கள் என்றால் அதில் சிலரே இருக்கின்றனர். அந்த சிலரில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியான மாயந்தி லாங்கர் கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் தொகுப்பாளர் என இரண்டு பிரிவிலும் அசத்த கூடியவர்.
அவரது பேச்சை காண ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்தும் அவர் அனுபவம் உள்ளவர்.இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஐபிஎல் தொகுப்பாளர்கள் பட்டியலில் மாயந்தி லாங்கர் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு ? அவர் ஏன் இந்த தொடரில் இடம் பெறவில்லை ? இந்த தொடர் முழுவதும் அவர் வரமாட்டாரா ? என்ற பல கேள்விகளை சமூகவலைதளத்தில் முன் வைத்திருந்தனர். மேலும் அத்துடன் இதற்கான காரணம் எங்களுக்கு வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாயந்தி லாங்கர் அவர் ட்விட்டர் பக்கத்தில் மூலம் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.