திருமணமான இரண்டே மாதத்தில் பெண் இழப்பு. கதறிய உறவினர்கள் – காதல் திருணமனம் குறித்து மோகன் ஜி போட்ட பதிவு.

0
359
- Advertisement -

காதல் திருமணம் குறித்து இயக்குனர் மோகன் ஜி கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மீனா.

-விளம்பரம்-

இவர் மன்னாதம்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவரை காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இதுவருமே வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருந்தாலும், திருமணம் முடிந்து சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், திருமணத்திற்கு பின் நாட்களில் மீனா உடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வந்திருக்கிறது. யுவராஜ் வீட்டில் நிறைய டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

ஈரோடு பெண் தற்கொலை சம்பவம்:

இதனால் மீனா திருணமான இரண்டே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இவருடைய இறப்பில் மர்மம் இருக்கிறது என்று மீனாவின் சகோதரர் ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் போலீசார், யுவராஜை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அதனால் தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி அவர்கள் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மோகன் ஜி பதிவு:

அதில் அவர், எம்மா, உனக்கு எவ்வளவு சீக்கிரம் நியாயம் எல்லாம் கிடைக்காதம்மா. அந்த தம்பிக்கு ஏதாவது ஒரு அரசியல் கட்சி பாராட்டு விழா நடத்தும். பெரிய பொறுப்பு தருவாங்க. இதை சொன்னதுக்கு இப்ப என்னையே திட்டுவாங்க. நாட்டில் இந்த மாதிரி பிரச்சனைகளை சமாளிக்க ஒரு அமைப்பு விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவர், நாங்க வேற ஜாதி அவங்க வேற ஜாதி என்று பெண்ணின் அக்கா பதிவு பண்ணுறாங்க.

-விளம்பரம்-

நெட்டிசன் விமர்சனம்:

அப்போ அந்த பையன் ஜாதி என்ன? என்று முதலில் தெரிந்து கொண்டு பதிவு போடு. அதுதான் நியாயம். அதுவும் இல்லாமல் தமிழ்நாட்டில் சாதி வெறியன்கள் என்ற ஒரு சில கட்சியை தான் சொல்லுவாங்க. அது உனக்கே தெரியும் என்று கூறியிருக்கிறார். இதற்கு இயக்குனர் மோகன் ஜி, எப்பவுமே எந்த ஜாதி காதலில் பிரச்சினை என்று நான் குறிப்பிட்டு சொன்னது இல்லை. ஆனால், நீங்கள் முன்னாடியே ஆஜராகி தானாக சிக்கிக் கொள்பவர்கள்.

மோகன் ஜி பதில் பதிவு:

எந்த ஜாதியாக இருந்தாலும் பெற்றோர் ஒருவருடைய சம்மதம் ரொம்ப முக்கியம். ஓரமா நின்னு வேடிக்கை பாரு தம்பி என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் தான் எடுத்து வைத்தார். அதன் பின் இவர் திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை கொடுத்து இருக்கிறார். அதோடு இவர் படங்கள் எல்லாம் ஜாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

Advertisement