அவ்ளோ பணம் இருந்தும், போயஸ் கார்டனில் வீடு இருந்தும் அவரும் சாதார மனுஷன்னு நிரூபிச்சிட்டாரு – ரஜினி வீட்டில் இருந்த அந்த பொருளை கண்டு வியந்த நெட்டிசன்கள்.

0
1310
- Advertisement -

சூப்பர் ஸ்டார் வீட்டில் இருக்கும் பொருளின் விலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் வீட்டில் இருக்கும் கொசுபேட்டின் விலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

காந்தாரா படம் :

அதாவது, கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்த காந்தாரா படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், தமிழில் இந்த படம் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது.

ரஜினியின் பாராட்டு:

தமிழகத்திலும் காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. அது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சனங்கள் என பலருமே பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் காந்தாரா படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டி இருந்தார். பின் நடிகர் ரிஷப் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு சென்று இருந்தார்.

-விளம்பரம்-

ரஜினி வீட்டு கொசு பேட்டின் விலை:

ரஜினி அவர்கள் காந்தாரா மிக சிறந்த படம் என்றெல்லாம் பாராட்டி இருந்தார். இது குறித்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் வீட்டில் இருக்கும் கொசுக்கொல்லி பேட் குறித்த தகவல் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, ரஜினிகாந்த் வீட்டில் இருக்கும் அந்த கொசுக்கொல்லி பேட்டின் விளம்பரம் ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

நெட்டிசன்கள் கேலி :

அதில் அந்த பேட்டின் விலை 749 ரூபாய் எனவும், இது அமேசானில் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதே போல ரஜினி வசிக்கும் போயஸ் கார்டனில் தான் பல அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களின் வீடும் அமைந்து இருக்கிறது. அப்படி வசதி வாய்ந்தவர்கள் இருக்கும் பகுதியிலேயே கொசு தொல்லை இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement