ரத்தக்கண்ணீரில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட நிபந்தனைகள். அதில் ஒன்று கே.பி.சுந்தராம்பாளை விட 25 ஆயிரம் சம்பளம் அதிகம் தர வேண்டும் என்பது.

0
1188
Rathakanner
- Advertisement -

ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம் ஆர் ராதா போட்ட நிபந்தனைகள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இயக்குனர் கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் ரத்தக்கண்ணீர். இந்த படத்தில் எம் ஆர் ராதா, எஸ் எஸ் ராஜேந்திரன், சந்திரபாபு, துரைசாமி, ஸ்ரீரஞ்சனி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சி எஸ் ஜெயராமன் இசை அமைத்திருந்தார். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் ரத்தக்கண்ணீர் படத்திற்கு எம் ஆர் ராதா போட்ட நிபந்தனை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் எம் ஆர் ராதா. இவர் படத்தில் வில்லனாக மட்டுமில்லாமல் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் புகழ்பெற்ற மேடை நாடக நடிகரும் ஆவார். இவரைப்போன்ற தன்மானமும், துணிச்சலும் மிக்க கலைஞர் இவருக்கு முன்பும், பின்பும் இருந்தது இல்லை என்று தான் சொல்லணும். இடம் பொருள் ஏவல் பார்க்காமல் அவருடைய விமர்சனங்கள் அம்புகளாக பாயும். இதனாலேயே எம் ஆர் ராதா என்றால் அனைவருக்கும் ஒருவிதமான பயம் கலந்த மரியாதை இருக்கும். இவர் நாடகத்தையே முழுமையான கலையாக கருதியிருந்தார். அவரைப் பொறுத்தவரை சினிமா இரண்டாம்பட்சம் தான்.

- Advertisement -

ரத்தக்கண்ணீர் படமாக்க முயற்சி:

ஓய்வு நேர பொழுதுபோக்கு நாடகத்தில் எந்த ஒரு டேக் இல்லாமல் மூன்று மணி நேரம் நடிக்க வேண்டும். ஆனால், சினிமாவில் ஒரு காட்சிக்கு ஒன்பது டேக்குகள் எடுப்பார்கள். சினிமாவில் மட்டும்தான் தப்பு செய்தா ஓய்வெடுக்கச் சொல்லி ஆப்பிள் ஜூஸ் தருவான் என்று சினிமாவை பற்றி விமர்சனம் செய்தவர். அந்த வகையில் அவரின் ரத்தக்கண்ணீர் நாடகத்தை சினிமாவாக துணிந்து எடுக்க முயற்சி செய்தார்கள். அந்த நாடகம் அப்போது பலநூறு முறை மேடையேறி இருந்தது. சாமானியர்கள் அனைவரும் அந்த நாடகத்தின் கதை தெரியும். அதனை படமாக்க விருப்பம் தான்.

எம் ஆர் ராதா குறித்த தகவல்:

ஆனால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது போல எம் ஆர் ராதா விடம் யார் பேசுவது என்று பலரும் பயந்தார்கள். அப்படியே அந்த படம் திரைப்படமாக சம்மதித்தாலும் யாரை பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது என்று குழப்பத்தில் இருந்தார்கள். குஷ்டரோகி வேடத்தில் நடிக்க யாருமே முன்வரவில்லை. இத்தனை குழப்பங்கள், கேள்விகளுக்கு நடுவில் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் ராதாவை தேடி சென்றார். அப்போது அவரிடம் விஷயத்தைச் சொன்னார். ஆனால், அந்த சமயத்தில் எம் ஆர் ராதா வுக்கு மீண்டும் சினிமாவுக்கு போக விருப்பமில்லை.

-விளம்பரம்-

எம் ஆர் ராதா போட்ட நிபந்தனை:

தேடி வந்து கேட்டதால் அவர் யோசித்து சில நிபந்தனைகள் போட்டார். வேறொருவர் என்றால் அந்த நிபந்தனைக்கு தலைதெறிக்க ஓடி இருப்பார். அவர் போட்ட நிபந்தனை, சினிமாவில் நடித்தாலும் நாடகத்தை விட மாட்டேன். நாடகம் வழக்கம் போல நடக்கும். அது முடிந்த பிறகுதான் வந்து நடிப்பேன். அப்போது அவ்வையார் படத்துக்காக கே பி சுந்தராம்பாள் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. கே பி சுந்தராம்பாள் வாங்குவதைவிட 25000 சேர்த்து கொடுங்க என்று ராதா கேட்க அதற்கு பெருமாளும் சம்மதித்தார். அதனை தொடர்ந்து படத்தினுடைய வேலைகள் விறுவிறுவென்று தொடர்ந்தது.

ரத்தக்கண்ணீர் பட வெளியீடு:

தாசி காந்தா கதாபாத்திரத்தில் நடிக்க அப்போதைய முன்னணி நடிகைகள் யாரும் முன்வராததால் புதுமுகம் ஒருவரை ஒப்பந்தம் செய்தார்கள். இந்தப்படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. குறிப்பாக, படத்தில் ராதாவின் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்றும் இந்த படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது.

Advertisement