ஒரே நாளில் முடிந்த இரண்டு சகாப்தங்கள் – ஒய்வை அறிவித்த தோனி மற்றும் ரெய்னா.

0
3299
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் என்ற பட்டப் பெயருடன் திகழ்ந்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர்.

-விளம்பரம்-
He thinks one step ahead': Suresh Raina says MS Dhoni was gifted ...

உலக கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி பிறகு தோனியின் ஓய்வு பற்றிய பேச்சு முக்கியமாக இருந்து வருகிறது. அரையிறுதிப் போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதில் இருந்து தோனியின் ஒய்வு குறித்து தான் பலரும் பேசி வந்தனர். இந்த நிலையில் தனது ஒய்வு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தோனி, இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. மாலை 7.29 மணியிலிருந்து நான் ஓய்வுபெறுவதாகக் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அந்தக்வீடியோவில் , அவர் இந்திய அணியில் ஆடிய முதல் ஆட்டத்திலிருந்து பல நினைவுகளின் தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன.ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்த நிலையில் தற்போது அணைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க நீண்ட காலமாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement