இரு ரூபாய்க்கு கூட பேரம் பேசுறாங்க – சைக்கிளில் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் நான் கடவுள் பட நடிகர்.

0
847
naankadavul
- Advertisement -

இயக்குனர் பாலா இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் கடவுள். இந்த படத்தில் ஆர்யா, பூஜா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் ராமர் வேடத்தில் நடித்திருந்தவர் நடிகர் முகம்மது சுல்தான். இதற்குப் பின் இவர் ரஜினியின் காலா, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்கு பின்பு சினிமாவில் வாய்ப்புகள் சரியாக வராததால், சம்பளம் பற்றாக்குறை என்பதாலும் சினிமாவை விட்டு விலகி விட்டார். தற்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்பதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவரை பிரபல சேனல் ஒன்று பேட்டி எடுத்து இருந்தது. அதில் முகமது சுல்தான் கூறியிருந்தது, என்னுடைய பெயர் முகம்மது சுல்தான். நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன். சொந்த ஊரில் உழைத்து சம்பாதித்து சம்பளம் குறைவு என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். நான் சென்னை வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. வண்டிகளில் காய்கறி வியாபாரம் செய்வது, ஃபேன்சி பொருள் ஐட்டங்களை சைக்கிளில் விற்பது போன்ற பல வேலைகளை செய்திருக்கிறார். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : அவசர அவசரமாக நடந்த நக்ஸத்ராவின் திருமணம், வெளியான புகைப்படம் – திடீர் திருமணத்திற்கு இப்படி ஒரு காரணமா ?

நடிகர் முகம்மது சுல்தான்:

என்னுடைய மனைவி வீட்டில் தான் இருப்பார். நான் தான் வேலைக்கு போறேன். வரும் வருமானத்தில் பாதி வாடகை போய்விடும். மீதி வருமானத்தை வைத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். சேமிப்பு என்பது எல்லாம் முடியாத ஒன்று. அதுவும் இப்போது இருக்கும் விலைவாசி காலகட்டத்தில் வயிற்றுக்கு மூன்றுவேளை சாப்பிடுவதே கஷ்டமான ஒன்று. நமக்கு தூக்கி விடுபவர்கள் யாரும் இல்லை என்பதால் நாமே கஷ்டப்பட்டு முன்னேற வேண்டும். நாம் முன்னேற நினைத்தாலும் ஒரு சில பேரு எங்கிருந்தோ வந்து அதை தடுக்கிறார்கள்.

-விளம்பரம்-

தொழில் குறித்து பேசியது:

இது விதி என்று நினைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். என் வாழ்வில் நான் பல கஷ்டங்களை பார்த்துவிட்டேன். கடை வைத்து பிழைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அதையும் தடுக்க பல பேரு எங்கிருந்து கிளம்பி வருகிறார்களோ? தெரியவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தான் நான் இந்த சைக்கிளில் பேன்சி பொருட்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறேன். இதில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. அதில் 500 ரூபாய் முதலீடு போக தான் நமக்கு கிடைக்கும்.

சினிமா அனுபவம் குறித்து சொன்னது:

அதை வைத்து தான் வாடகை, வீட்டு செலவு, பிள்ளைகளை பார்ப்பதற்கு சென்று கொண்டிருக்கின்றது. கஷ்டம் தான் இருந்தாலும் வாழ்ந்து தான் ஆக வேண்டும். மேலும், நான் கடவுள் படத்தில் நடித்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் ரஜினி, விஜய்யின் படங்களிலும் சிறு வேடத்தில் நடித்து இருக்கிறேன். ஏஜென்ட் மூலமாக தான் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். அழைப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சினிமாவில் நடிக்கும்போது பெரிதாக வருமானமில்லை.

சம்பளம் குறித்து சொன்னது:

ஆயிரம் ரூபாய் என்று சொல்லி ஏஜென்ட்கள் பாதி எடுத்துக் கொண்டு மீதி தான் நமக்கு தருவார்கள். அதை வைத்து ஒன்றும் பண்ண முடியாது என்பதால் தான் நான் சினிமாவை விட்டு வந்து சொந்தமாக தொழில் செய்து கொண்டிருக்கிறேன். இனிமேல் பட வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் அதற்கேற்றவாறு சம்பளமும் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று சிரித்துக் கொண்டே தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் முகம்மது சுல்தான்.

Advertisement