நடிகர் ராகவா லாரன்ஸ் ‘காஞ்சனா’ திரைப்படத்தை ஹிந்தியில் இயக்க திட்டமிட்டிருந்தார். இதில் இந்தி நடிகர் அக்சய் குமார் நடிப்பதாக இருந்தது. கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ‘லட்சுமி பாம்பி என்ற பெயரில் இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்ட்டரை அக்சய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு லாரன்ஸ், பிரஸ்ட் லுக் வெளியாகும் விஷயம் தெரியாது என்றும் இதனால் ” மதியாதார் தலைவாசல் மிதியாதே என்ற தமிழ் முதுமொழி ஒன்று உள்ளது அதன் படி நான் ‘லக்ஷ்மி பாம்ப் படத்திலிருந்து வெளியேறுகிறேன் ” என்று கூறியிருந்தார்.
ஆனால் லாரன்ஸ் அவர்கள் ” இப்படத்தின் கதையை அவரிடம் தருகிறேன். அவர் வேறு யாரையாவது வைத்து எடுத்துகொள்ளலாம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் வெளியேறியது குறித்து படக்குழு விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், “படத்தின் இரண்டாவதுகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது.
அதற்காக நடிகர் அக்ஷய்குமார் 40 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். அதற்குள் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். வேறு இயக்குநரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் இயக்குநர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். லாரன்ஸுக்கும் தயாரிப்பாளர் தரப்புக்கும் தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை விரிவாக வெளியில் சொல்ல முடியாது” என்றார்.