ஒத்த செருப்பு – விமர்சனம்.!

0
2533
otha-seruppu
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் வித்தியாசமான முயற்சியில் படங்களை கொடுத்து சினிமா துறையில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் நடிகராகவும், இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கூட சினிமா துறையில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது தன்னுடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக ” ஒத்த செருப்பு சைஸ் 7″ என்ற படத்தை நடித்தும் , இயக்கியும் உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

-விளம்பரம்-
Related image

கதைக்களம் :

படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் தான், மற்ற கதாபாத்திரங்களின் முகம், உடல் எதுவும் காட்டவில்லை. அவர்களின் குரல் மட்டும் தான் மற்றும் அவர்களை உணர்த்தும் வகையில் பொருட்கள் காட்டப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, மொபைல் பேசி அழைப்பு வந்தால் போனை காட்டுவதும், பெண் டாக்டர் என்றால் ஹாண்ட் பேக் காட்டுவது போன்ற சின்னச்சின்ன நுணுக்கங்களையும் கவனமாக கையாண்டு உள்ளார் நடிகர் பார்த்திபன்.அப்படி என்ன கதை ஒருத்தர் மட்டும் வைத்துபடம் எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தால்? பார்த்திபன் ஒரு சாதாரணமான நடுத்தர குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருபவர். அவருக்கு ஒரு கிராமத்து மனைவியும், என்னவென்றே தெரியாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தை.

இதையும் பாருங்க : பிக் பாஸ் சீசன் 4- ன் தொகுப்பாளர் சிம்புவா ? அதிகராபூர்வ அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி.!

- Advertisement -

பார்த்திபன் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்து வாட்ச்மன் வேலை செய்பவர். தான் வேலை செய்யும் இடத்திலேயே தன்னுடைய மனைவிக்கும் வேலை வாங்கிக் கொடுக்கிறார். இவர்கள் இருவரின் நோக்கமும் தன்னுடைய மகனை எப்படியாவது இந்த நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் என்பதுதான். வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய மனைவிக்கு ஏற்படும் இன்னல்களும், அவலங்களும் குறித்து கூறி உள்ளார். இதற்கிடையே பல கொலைகளும் நடந்துள்ளன.திடீரென்று ஒரு கொலை செய்துவிட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்திபனை அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர் டெபுடி கமிஷனர். அந்த விசாரணையில் பார்த்திபன் ஒரு கொலை மட்டும் செய்யவில்லை நிறைய சில கொலைகளை செய்து இருக்கிறார் என்று அவரே கூறுகிறார். என்ன காரணத்தால் அவர் கொலை செய்து கொண்டு வருகிறார்? இப்படி கொலைகளை செய்யும் இடத்தில் தடயமாக ஒத்த செருப்பு உள்ளது. யாருடைய செருப்பு? யாரை கொலை செய்கிறார் ? ஏன் கொலைகளை பார்த்திபன் செய்கிறார்? அவருடைய மனைவியை எப்படி காப்பாற்றுவார்? தன் மகனை காப்பாற்றுவாரா ? என்பது தான் மீதி கதை.

இந்த படத்தில் அதிக அளவு முதலீடு போடாமல் சிம்பிளாகவும், பல சுவாரசியமான காட்சிகளையும் வைத்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் பின்னணி இசையின் மூலம் அதிகமாக மக்களை ஈர்க்கிறது. படம் முழுக்க ஒரே கதாபாத்திரமாக இருந்தாலும் மற்றவர்கள் சொல்ல விரும்பும் கருத்தை தன் நடிப்பின் மூலம் மக்களுக்கு புரிய வைத்திருக்கிறார். அடுத்தது என்ன? என்ன? என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவில் படத்தை கொண்டு சென்றுள்ளார். இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு பக்கபலமாக அமைந்தது இசைதான். இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் நான்கு நிமிடங்கள் எடுக்கப்பட்டதாகும் .

-விளம்பரம்-

தமிழ் சினிமா துறையில் சினிமா துறையில் அதிக முதலீடு இல்லாமல் எவ்வளவோ படம் வெளி வந்து வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்த படம் அதிக அளவு வெற்றி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமூகத்தில் ஒரு சாதாரண நடுத்தர தனிமனிதன் வாழ்க்கையில் நடக்கும் அவலங்களையும், கொடுமைகளையும் வெளிச்சம்போட்டு காட்டும் வகையில் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 உருவாகியுள்ளது. இந்த படத்தில் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார். ஆனால் அவர் தான் வெற்றி பெறுவார். அது யாரென்று தெரிவது தான் கதையின் சுவாரஸ்யமே.

Image result for otha seruppu

பிளஸ் :

இந்த படத்தில் சிம்பிளான மேக்கப், ஒரே காஸ்ட்யூம் இருக்கிறது.

ஒவ்வொரு காட்சியும் நான்கு நிமிடம் என்பதன் மூலம் அவர் எந்த அளவுக்கு உழைப்பு போட்டு எடுத்து இருப்பார் என்பது தெரிகிறது.

படத்தின் பட்ஜட் குறைவு.

படத்தின் இசை மக்கள் அனைவரையும் ஈர்த்தது.

மைனஸ்

படம் முழுக்க ஒரே கதாபாத்திரம் என்பதால் போரடிக்கும், இன்னும் கொஞ்சம் கதாபாத்திரங்களைக் கொண்டு வந்து இருந்தால் நன்றாக இருக்கும்.

காமெடி சீன்கள் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

படத்திற்கான லொகேஷன் வித்தியாசமாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

இதையும் பாருங்க : காப்பான் – விமர்சனம்.!

இறுதி அலசல் :

பார்த்திபன் கொடுத்த வித்தியாசமான படங்களிலேயே இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தனி மரம் தோப்பாகாது என்ற பழமொழியை உடைத்தெறிந்து விட்டு இந்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் நிற்கிறது. ஒன் மேன் ஆர்மி என்பதுபோல பார்த்திபன் மொத்தத்தில் ஒரு ஒன் மேன் ஹீரோ தான் என்று நிரூபித்து விட்டார்.

Advertisement