என்னை எதிர்பதற்க்காக எடுக்கப்படும் படங்களில் அந்த அடிப்படை கூட சரியா இல்ல – மோகன் ஜியை சொல்றாரா ரஞ்சித்?

0
68
- Advertisement -

பிகே ரோஸி திரைப்பட விழாவில் பிரபல இயக்குனரை விமர்சித்து ரஞ்சித் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பிகே திரைப்பட விழா குறித்த செய்திகள் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புரட்சியாளர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்கள் ஏப்ரல் மாதத்தில் தான் பிறந்தார். இதனால் இந்த மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு அமையும் வானம் கலைத் திருவிழா ஏற்பாடு செய்திருக்கிறது.

-விளம்பரம்-

இது சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தகங்கள் கடந்த ஐந்தாம் தேதி அன்று தலித் வரலாற்று மாத கண்காட்சியுடன் துவங்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது நிகழ்ச்சியாக பிகே ரோஸி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் கடந்த எட்டாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த விழாவை வருடம் வருடம் ரஞ்சித் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

பிகே ரோஸி திரைப்பட விழா:

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்த விழா கடந்த எட்டாம் தேதி தொடங்கி 10ம் தேதி தான் நிறைவடைந்து இருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள், இயக்குனர்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் தமிழ், மலையாளம், மராத்தி உட்பட பல மொழி திரைப்படங்கள் மற்றும் ஆவண படங்கள், குறும்படங்கள் ஆகியவை திரையிடப்பட்டது. அதோடு பல்வேறு தலித் இயக்குனர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலித் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

விழா குறித்த தகவல்:

கடைசி நாளில் மாமன்னன் படம் திரையிடப்பட்டு மாரி செல்வராஜ் பல விஷயங்களை எமோஷனலாக பகிர்ந்து இருந்தார். மேலும், இந்த நிகழ்வில் சமூக சிந்தனை என்ற தலைப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரர் சிறப்புரை ஆற்றி, சினிமா துறையில் இயக்குனர் பா ரஞ்சித் உடைய வருகைக்கு பிறகு தான் எளிதாக சமூக சிந்தனை கொண்ட படம் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

பா.ரஞ்சித் சொன்னது:

இந்த நிலையில் இந்த நிகழ்வில் பா ரஞ்சித், ஜாதியை எதிர்த்தவர்கள், ஜாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என்று இரண்டு வகையாக இருக்கிறார்கள். இதை நாம் உணர வேண்டும். என்னை எதிர்ப்பதற்காக எடுக்கப்படும் படங்களில் கிராப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை. இயக்குனர் ஜெயக்குமார் அவர்களின் புத்தகமும் அவருடைய தம்மமும் நூலில் என்னுடைய படங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. இப்படி இவர் பேசியிருந்தது தான் தற்போது சோசியல் மீடியாகி சர்ச்சையாகி இருக்கிறது.

இயக்குனரை விமர்சசித்த ரஞ்சித்:

மேலும், இவர் தன்னை எதிர்த்து படங்கள் எடுப்பவர் என்று இயக்குனர் மோகன் ஜியை தான் கூறுகிறார் என்றெல்லாம் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். காரணம், மோகன் ஜி படங்களும் ஜாதியை வைத்து தான் எடுக்கப்பட்டு வருகிறது. மோகன்ஜி எடுத்த பழைய வண்ணார்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் பகாசுரன் போன்ற படங்கள் எல்லாமே சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

Advertisement