பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இன்று வெளியீடு.! எதில் தெரியுமா ?

0
1074
- Advertisement -

சமீப காலமாக ரஜினி, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார், அதனால், தான் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறார் ரஜினி. அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, சசி குமார், மேகா ஆகாஷ் என்று பலர் நடித்திருந்தனர். கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, தற்போதும் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்க : பேட்ட பட டீஸரில் பார்த்த டார்ச் லைட் சண்டை காட்சி.! அது இது தான்.! கார்த்திக் சுப்புராஜ்.!

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சன் நெக்ஸ்ட் செயலியில்இன்று (மார்ச் 15,வெள்ளிக்கிழமை ) வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. எனவே, பேட்ட படத்தில் இடம்பெறாத பல காட்சிகள் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்த படத்தின் டீஸர் ரஜினிகாந்த் பிறந்தநாளை கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி வெளியாகி இருந்தது. அதில் ரஜினிகாந்த இடம்பெற்ற டார்ச் லைட் சண்டை காட்சி இந்த படத்தில் மிகவும் எதிர்பார்க்கபட்ட சண்டை கட்சியாக இருந்தது. ஒருவேளை அந்த காட்சிய கூட இன்று வெளியாகலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

-விளம்பரம்-

Advertisement