அஜித்தின் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கே தெரியவில்லை – பிரியா பவானி ஷங்சர்

0
1994
p[riya-bhavani-shankar

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் ஆன்கர், சீரியல் என தற்போது ஹீரோயினாக உயர்ந்திருப்பவர் மேயாதமான் ப்ரியா பவானி சங்கர். அதிலும் கல்யாணம் முதல் காதல் சீரியலின் மூலம் தனது நடிப்புத் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பவர். அதன், பின்னர் தான் மேயாதமான் படத்தில் ஹீரோயினாக அசத்தியிருப்பார்.

சமீபத்தில் இவர் கலகலவென ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவருக்கு பிடித்தது பிடிக்காதது என அனைத்தையும் பற்றி பேசினார். மேலும் அனைவரிடமும் கேட்கப்படும் தலயா? தளபதியா? கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கும் அவர் பதில் அளித்தார்.
Mugavareeஎனக்கு இருவரையுமே பிடிக்கும். இருவரது படங்களையும் விடாமல் பார்த்திவிடுவேன். அதிலும் அஜித் சாரின் முகவரி படத்தை நிறைய தடவை பார்த்திருக்கிறேன். இதுவரை அந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என எனக்கே தெரியவில்லை. அதில் அஜித் சார் ரொம்ப ஹேண்ட்சம்மாக இருப்பார். ஜோதிகா மேடம் நன்றாக நடித்துப்பார் எனக் கூறினார் ப்ரியா.