தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என்ற இடத்தை நிரப்ப தகுதியுடையவர்களாக இருந்து வருவது விஜய் மற்றும் அஜித் தான். பெரும்பாலும் சினிமா பிரபலங்களிடம் பேட்டி எடுக்கும் போது இவர்கள் இருவரை பற்றிய கேள்விகள் இடம்பெறாமல் இருக்காது.
அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகையான ரஷி கண்ணாவிடம் அதே கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர் ரஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வரவிருக்கு வந்த ‘அடங்கமறு’ படத்தில் ரிஷி கண்ணா கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : ஸ்லீவ் லெஸ் ஆடையில் கடற்கரையில் அதிதி பாலன் நடத்திய போட்டோஷூட். ! பாத்து கூல் ஆகிகோங்க.!
இன்று (மே 11 )விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள அயோக்யா படத்திலும் கதநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரஷி கண்ணாவிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் விஜய்யா? அஜித்தா ? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரஷி கண்ணா, சிறு வயதில் எனக்கு நடிகர் ஷாருக்கான் மீது தான் அதிக ஈர்ப்பு இருந்தது. தற்போது, அது அப்படியே நடிகர் அஜித் மீது மாறியிருக்கிறது. அவரது சிரிப்பு ஒன்றே போதும், பிரமாதம். அவரோடு இணைந்து நடிக்கும்போது, அந்த சிரிப்பை நான், நேரிலேயே கண்டு ரசிப்பேன் என்று கூறியுள்ளார்.