தன்னை தூக்கிவிட்ட சக்ரவர்த்தியிடம் அஜித் பேசாமல் போனதற்கு இது தான் காரணமா ? உண்மையை போட்டுடைத்த பிரபலம்.

0
682
- Advertisement -

அஜித்துக்கும் எஸ் எஸ் சக்கரவர்த்திக்கும் இடையே இருந்த பிரச்சனைக்கு இதுதான் காரணம் என்று வலைப்பேச்சு அந்தணன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். முதன்மை நடிகராக மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இந்த இடத்தை அடைந்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் பல தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் ரசிகர்களின் ஆதரவால் சினிமாவில் தொடர்ந்து நிலைக்க முடிந்தது. அஜித்தின் வளர்ச்சிக்கு ஒரு பக்கம் உறுதுணையாக அமைந்தது பிரபல தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தான். இதன் காரணமாக ரசிகர்கள் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் அஜித்தின் சொந்த நிறுவனமா என்று கேட்கும் அளவுக்கு கூட இருந்தது. 1997ஆம் ஆண்டு வெளியான ராசி படத்தை தயாரித்தார் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இது தான் நிக் ஆர்ட்ஸ் பேனரில் அஜித் நடித்த முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஜித் நிக் ஆர்ட்ஸ் பந்தம் :

இந்த படத்தை தொடர்ந்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு என்று அஜித்தின் பல்வேறு திரைப்படங்களை நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துள்ளார். அஜித் மற்றும் எஸ் எஸ் சக்கரவர்த்தி கூட்டணியில் உருவான பல திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், இடையில் எஸ் எஸ் சக்கரவர்த்தியுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக நிக் ஆர்ட்ஸ் பேனரில் பணியாற்றுவதை நிறுத்தினார் அஜித். இறுதியாக 2006 ஆம் ஆண்டு வெளியான வரலாறு படம் தான் அஜித் நடித்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் எஸ் சக்கரவர்த்தி மரணம்:

அஜித்தை பிரிந்த பின்னர் எஸ் எஸ் சக்கரவர்த்தி சிம்புவை வைத்து காளை படத்தை வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து ரேணிகுண்டா, 18 வயசு, வாலு போன்ற படங்களை தயாரித்தார். 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்தபடத்தையும் தயாரிக்காமல் இருந்த எஸ் எஸ் சக்கரவர்த்தி இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகிய மாபெரும் பிட் அடித்த விலங்கு வெப்சீரியஸ்ஸை தயாரித்து இருந்தார். அண்மையில் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னையில் இவர் உயிரிழந்துள்ளார்.

-விளம்பரம்-

வலைப்பேச்சு அந்தணன் அளித்த பேட்டி:

இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அஜித் எஸ்.எஸ்.சக்ரவர்த்தியை பார்க்கவில்லை. இது குறித்து பலருமை சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்று எழுத்திருந்தார். அதில் அவர், அஜித்தை வைத்து எஸ் எஸ் சக்கரவர்த்தி நிறைய படம் செய்திருக்கிறார். இரண்டு பேருமே ஆரம்ப காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அஜித் மற்றும் எஸ்எஸ் சக்கரவர்த்தி தோல்வியை சந்தித்த நேரத்தில் இருவருமே நண்பர்களாக மாறி வேறு படங்களில் கூட்டணி வைத்துக் கொண்டனர் .

அதேபோல் அஜித்- சக்கரவர்த்திகிடையே பிரச்சனை இருப்பது உண்மைதான். இதற்கு நிறைய காரணம் சொல்லப்படுகிறது. அதில் ஒன்று, அஜித் தன் நண்பர் என்ற நம்பிக்கையின் பேரில் நிறைய செக்கில் கையெழுத்து போட்டு சக்கரவர்த்தியிடம் கொடுத்திருக்கிறார். அதை வைத்து சக்கரவர்த்தி நிறைய இடங்களில் பைனான்ஸ் வாங்கி வேறு விதமாக பயன்படுத்திக் கொண்டாராம் .அதனால் தான் அஜித் வருத்தப்பட்டு அவரை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது. ஆனால், ஒருமுறை சக்கரவர்த்தியிடம் அஜித் பற்றி நான் பேசினேன். அவர் அது பற்றி சரியாக பதில் சொல்லவில்லை. என்று கூறியிருக்கிறார்

Advertisement