சசிகுமாரை தொடர்ந்து ராஜமௌலி படத்தில் இணையும் தமிழ் நடிகர்.! அதுவும் வில்லனாக.!

0
497
sasikumar

பாகுபலி என்ற பிரமாண்ட படைப்பின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த ராஜமௌலி தற்போது அடுத்த படைப்பிற்கு தயாராகிவிட்டார். இந்த படத்தில் சசி குமாரை தொடர்ந்து மற்றுமொரு தமிழ் நடிகர் இணைந்துள்ளார்.

- Advertisement -

ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் நடிக்கவுள்ள ‘RRR ‘ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் சசிகுமார் ஏற்கனவே கமிட் ஆகியுள்ளார். பாகுபலி இரண்டு பாகங்களிலும் தமிழ் நடிகர்களான சத்யராஜ், நாசர் இருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் கொடுத்திருந்தார் ராஜமவுலி. இந்த நிலையில், தற்போது அவர் இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படமும் பாகுபலியைப் போன்றே மூன்று மொழிகளில் பிரமாண்ட படமாக தயாராகிறது.

இதையும் படியுங்க : பிரம்மாண்ட வரலாற்று படத்தில் விஜய்.! இயக்குனர் இவரா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! 

ரம்யாகிருஷ்ணன் முக்கியமான வேடத்தில் நடிக்கும் நிலையில், படத்தில் நாயகியாக நடிப்பது யார் என்கிற தகவல் வெளியாகவில்லை. ஆனால், பாகுபலியில் சத்யராஜ் கட்டப்பா என்ற கேரக்டரில் நடித்ததைப்போன்று இந்த படத்தில் டைரக்டர் சமுத்திரகனி ஒரு நெகடீவ் ரோலில் மிரட்டல் வில்லனாக நடிக்கிறார்.

-விளம்பரம்-

இதற்கு முன்பு தமிழில் தான் இயக்கிய நாடோடிகள், நிமிர்ந்து நில் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த சமுத்திரகனி, அந்த படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். அதையடுத்து இப்போது நேரடி தெலுங்கு படத்தில் மெகா வில்லனாக நடிக்கிறார்.

Advertisement