நான் தான் கடனே கொடுத்தேன் – அமீர்,ஞானவேல் விவாகரத்தில் புதிய ட்விஸ்ட் கொடுத்த சசிகுமார்

0
496
SASI
- Advertisement -

இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் அமீர்-ஞானவேல் ராஜா சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு இவர் படங்களில் நடித்தும் வருகிறார். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார். தற்போது அமீர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாயவலை. இந்த படத்தை அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஜப்பான் படத்தின் விழாவில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய பல இயக்குனர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

- Advertisement -

அமீர் செலுத்திய குற்றச்சாட்டு:

இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் இது குறித்து பேட்டியில் அமீர், நான் கொஞ்சம் கோபக்காரன், சுய மரியாதையுடன் வாழ்பவன். அதனால் தான் நான் சூர்யாவிடம் இருந்து ஒதுங்கி விட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அதனால் நானும் போகவில்லை. பருத்திவீரன் படத்தின் வெற்றியால் தான் கார்த்திக் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். சிவக்குமார், சூர்யா, கார்த்திக் குடும்பத்துடன் எனக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்களுடைய நட்பை கெடுத்து விட்டார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி:

அவரால் எனக்கு இரண்டு கோடிக்கும் மேல் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம். அவரிடம் எனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியும் நீதி கிடைக்கவில்லை. இப்போது நான் நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இயக்குனர் அமீர் அளித்திருந்த பேட்டி கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. பின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, பருத்திவீரன் படத்தை நானாக தயாரிக்கவில்லை. அதுவும் அமீருக்காக தான். அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார்.

-விளம்பரம்-

அமீர் குறித்து சொன்னது:

சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். அப்போது அமீர் பருத்திவீரன் எடுத்த பட்ஜெட்டில் 4 படங்களை தயாரித்திருக்கலாம். இப்போதும் அவர் சொன்னால் எத்தனை பேர் முன்னிலையிலும் பருத்திவீரன் பிரச்சனை குறித்து நான் பேச தயார். அவருக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. இனி அமீர் இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டே இருந்தால் நானும் விடமாட்டேன் பதிலடி கொடுப்பேன். என்னை மட்டும் இல்லாமல் இன்னும் சில தயாரிப்பாளர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு அமீர் மோசடி செய்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

சசிகுமார் பதிவு:

இதை அடுத்து இயக்குனர் அமீர் மிக நீண்டமாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அமீரின் நண்பரும், இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இணையத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். ‘பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை என்று கூறி இருக்கிறார்.

Advertisement