விஜய் 63 படத்தின் பட பிடிப்பு தேதி.! வெளியான நம்பகரமான தகவல்.!

0
281
vijay-63

நடிகர் விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது அட்லீயுடன் இணைந்துள்ளார். மெர்சல், தெறி படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக அட்லீயின் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இந்த அட்லீயின் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும், விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தில் கால் பந்து அணியாக நடிப்பதற்காக 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இந்த படத்தின் பட்ஜெட் 100 என்றும் சில தகவள்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் முன்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 63 படத்தின் பூஜை ஜனவரி 20ம் தேதியும், படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதியும் தொடங்கும் என நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.