அஜித் பிறந்தநாளுக்கு கிடையாது.! தள்ளிப்போனது நேர்கொண்ட பார்வையின் ரிலீஸ்.!

0
679
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜீத் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இந்தி நடிகை வித்யாபாலன் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Nerkonda-Parvai

இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், இந்த படத்தில் டாப்ஸி வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும், வில்லன் கதாபாத்திரத்தில் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கின்றார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க : நேர்கொண்ட பார்வை பட்டப்படிப்பில் அஜித் செய்த காரியத்தை அம்பலப்படுத்திய நடிகர் டெல்லி கணேஷ்! 

- Advertisement -

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையிலும் இந்த படம் திட்டமிட்டபடி சொன்ன தேதிக்குள் நிறைவடைய வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தனது பிறந்த நாளன்று இந்தப் படம் வெளிவரவேண்டும் என்று அஜித்தும் விரும்பினார். ஆனால், திட்டமிட்டபடி இந்த படம் மே 1 ஆம் தேதி வெளி வர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை மே 23ம் தேதி வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement