எப்படி இருக்கிறது அருண் விஜய்யின் ‘சினம்’ – முழு விமர்சனம் இதோ.

0
804
sinam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். சமீப காலமாக இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது அருண் விஜய் நடிப்பில் வெளியாகிருக்கும் படம் சினம். இந்த படத்தை ஜி என் ஆர் குமரவேல் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை நடிகர் விஜய்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு சபீர் இசையமைத்திருக்கிறார். படத்தில் பாலக் லால்வானி, காளி வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இன்று வெளியாகி இருக்கும் சினம் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் அருண் விஜய் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நேர்மையான துடிப்பான துணை காவல் ஆய்வாளர் கதையில் நடித்திருக்கிறார். இவருடைய மனைவியாக வரும் பாலக் லால்வானிக்கு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தை அருண் விஜய் மீது இருக்கும் வெறுப்பால் மிகக் கொடூரமாக கேவலமாக சித்தரிக்கிறார் காவல் ஆய்வாளர். அருண் விஜயின் மனைவிக்கு என்ன நடந்தது? காவல் ஆய்வாளர் சொன்ன சித்தரிப்பை அருண் விஜய் பொய்யாக்கினாரா? குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா?அருண் விஜயின் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை.

- Advertisement -

மாபியா, குற்றம் 23 ஆகிய படங்களை படங்களைத் தொடர்ந்து இந்த படத்திலும் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்திருக்கிறார். இவருடைய மனைவியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். முதல் பாதி முழுவதுமே அருண் விஜயினுடைய சண்டைக்காட்சி, கணவன் மனைவி அன்பு, குழந்தையின் மீதான பாசம் என்று கதை பொறுமையாக செல்கிறது. இரண்டாம் பாதியில் தன் மனைவிக்கு நிகழ்ந்த சம்பவத்தை எந்த ஒரு ஆதாரம் கிடைக்காமல் அருண் விஜய் தவிக்கிறார்.

குற்றவாளியை கண்டுபிடிக்க அருண் விஜய் போராடும் காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது. ஆனால், எல்லா காட்சிகளும் பார்வையாளர்களே யூகிக்க கூடிய அளவில் தான் இருக்கிறது. இயக்குனர் படத்தின் கதையை வேகமாகவும், சஸ்பென்ஸ் ஆகவும் நகர்த்த இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம். சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் இந்த கதையை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், சமூகத்தில் நடக்கும் தவறுகளை அரசின் முயற்சியால் மட்டும் தடுக்க முடியாது. மக்கள் தவறுகளை தட்டிகேட்க வேண்டும், தண்டனை கொடுக்க வேண்டும் என்று பல கருத்துக்களை முன் வைத்து இருக்கிறார் இயக்குனர். படத்தின் இறுதி காட்சி கார்த்திக் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நினைவுபடுத்துகிறது என்றே சொல்லலாம். கிளைமாக்ஸில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி வேறு மாதிரி காட்டி இருக்கலாம். எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு சினம் படம் சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறைகள் :

அருண் விஜய் நடிப்பு சூப்பர்.

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்.

ஆக்ஷன் காட்சிகள் அருமையாக உள்ளது.

திரைக்கதை நன்றாக இருக்கிறது.

குறைகள் :

கதைக்களத்தில் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

முதல் பாதி பொறுமையாக செல்கிறது.

காட்சிகள் எல்லாம் யூகிக்க கூடிய அளவில் இருக்கிறது.

சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சஸ்பென்ஸ் எதுவும் இல்லை.

மொத்தத்தில் சினம் – சீறிப் பாயவில்லை.

Advertisement