சினிமாவே வேண்டாம்னு என்ன டாக்டர் படிக்க வச்சார், அதுக்கு காரணம் – வெண்கல குரலோன் சீர்காழியின் மகன் சிவசிதம்பரம் சொன்ன Flashback.

0
1443
- Advertisement -

எம்ஜிஆருக்கு மருமகனாகும் வாய்ப்பு குறித்து சீர்காழி சிவசிதம்பரம் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசை கலைஞராக திகழ்ந்தவர் சீர்காழி கோ. சிவசிதம்பரம். இவர் கர்நாடக இசைப் பாடகர். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் மருத்துவரும் ஆவார். மேலும், கிளாசிக் காலகட்ட திரையிசை மற்றும் கர்நாடக இசையில் தனித்துவமானவர் வெண்கலக் குரலோன்’ சீர்காழி கோவிந்தராஜன்.

-விளம்பரம்-

இவருடைய மகன் பத்மஸ்ரீ சீர்காழி சிவசிதம்பரம். இவரை பாட்டு வைத்தியர் என்று தான் பலரும் அழைக்கிறார்கள். இவர் தன்னுடைய இசை திறமைக்காக கலைமாமணி விருது, தமிழிசை வேந்தர் பட்டம், பத்மஸ்ரீ விருது, இசைப் பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளை வாங்கி இருக்கிறார். இவருடைய மனைவி சாந்தி மீனாட்சி. இந்நிலையில் சமீபத்தில் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் அவருடைய மனைவி சாந்தி மீனாட்சியும் இணைந்து பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தனர்.

- Advertisement -

சிவசிதம்பரம் அளித்த பேட்டி:

அதில் சிவசிதம்பரம் தன் தந்தையை குறித்தும், திருமணம், திரைப்பயணம் குறித்தும் கூறியிருந்தது,
என்னுடைய அப்பாவை சந்திக்க இந்த வீட்டுக்கு வராத இசை கலைஞர்களே கிடையாது. அப்பாவைப் போல நான் பாடகராக வேண்டும் என்பது தான் என்னுடைய அம்மாவின் ஆசை. ஆனால், நானும் என் அக்காவும் மருத்துவர் ஆகணும் என்று என் அப்பா ஆசைப்பட்டார். காரணம், சினிமாவிலும், இசை துறையிலும் ஏமாற்றங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க மனபலம் தேவை என்று என் அப்பா நினைத்தார். உனக்கு இசை துறை வேண்டாம் என்று ஆதங்கத்துடன் என் அப்பா பலமுறை சொல்லி இருக்கிறார்.

தந்தை குறித்து சொன்னது:

அது மட்டும் இல்லாமல் என்னுடைய அப்பாவுக்கு நான் டாக்டர் ஆகிவிடுவேன் என்று அதீத நம்பிக்கை இருந்தது. ஆனால், என்னுடைய அம்மா சங்கீத வித்வான் கிருஷ்ணமூர்த்தி அய்யாவை என் இசை குருவாக்கினார். கல்லூரி படிக்கும் போதே பல கச்சேரிகளில் பாடியிருந்தேன். பொது மருத்துவ துறையில் பட்டம் மேற்படிப்பு முடித்துவிட்டு அரசு மருத்துவராகவும் வேலை செய்தேன். இதை பார்த்து என்னுடைய அப்பாவுக்கு பெருமையாக இருந்தது. என்னுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு மருத்துவத்துடன் மக்களை மகிழ்விக்கும் பாடகராகவும் மாறினேன்.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பு:

அதேபோல் அப்பா இறப்புக்கு முன் ஏற்கனவே கமிட் செய்திருந்த 41 கச்சேரிகளையும் நான் பாட சம்மதித்தேன். அதை நிறைவேற்றினால் அப்பாவின் ஆத்மா சாந்தியடையும் என்று முழு நேரமாக பாடி கொடுத்தேன். காலையில் மருத்துவம், மாலையில் இசை என்று இரண்டு நேரங்களிலும் பிசியாக வேலை செய்திருந்தேன். மேலும், ஆரம்பத்தில் கச்சேரிகளிலும், பக்தி ஆல்பங்களிலும் பாடி இருந்த எனக்கு மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் அபிநய சுந்தரி ஆடுகிறாள் என்ற பாடல் மூலம் பின்னணி பாடகர் ஆக வாய்ப்பு கொடுத்தார். அதனை தொடர்ந்து நான் சினிமாவில் பாடினேன்.

எம்ஜிஆர் ஆசை குறித்து சொன்னது:

அதோடு நான் பாடின அபிநய சுந்தரி ஆடுகிறாள் என்ற பாட்டு என்னுடைய மனைவிக்கு ரொம்பவே பிடித்து போய் இருந்தது. அந்த பாடலை பிடித்து போய் தான் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். அது மட்டும் இல்லாமல் தனக்கு பெண் பிள்ளை பிறந்திருந்தால் என்னைத்தான் கட்டி வைப்பதாகவும் எம்ஜிஆர் சார் ஆசையோடு இருந்திருந்தார். ஆனால், அதற்கான வாய்ப்பு தான் அமையவில்லை. தற்போது நான் மருத்துவத்துறை ஆலோசனைகளை வழங்கி வருகிறேன் என்று மனநிறைவுடன் கூறியிருக்கிறார்.

Advertisement