வேலைக்காரன் படத்தின் மூலம் தல தளபதிக்கு போட்டியாய் மாறிய சிவகார்த்திகேயன்.

0
1392

சிவா கார்த்திகேயன் என்னும் ஒரு ஹீரோ இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் எனில் அதற்கு அவரது கடின உழைப்பு ஒரு மிகப்பெரிய காரணம். கிட்டத்தட்ட எல்லா மேடைகளிலும் பழையதை மறக்காமல் அவருடைய உழைப்பினை பற்றி தவறாமல் பேசுவார் சிவா.

இவ்வளவு கடின உழைபிற்கு பிறகு தற்போது கிட்டத்தட்ட தல, தளபதிக்கு போட்டியாகும் இடத்திற்கு வந்துள்ளார் சிவா. அவர் நடித்துள்ள வேலைக்காரன் திரைப்படம் வரும் 22ஆம் தேதி பிரம்மாண்டமாக திரைக்கு வருகிறது.

இந்த படத்தினை மோகன் ராஜா இயக்கியுள்ளர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகிள்ளது.

அதே போல், ரீலீசுக்கு முன்னர் படத்திற்கு விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமை மற்றும் விளம்பர உரிமை என கிட்டத்தட்ட ₹ 60 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளது வேலைக்காரன் படம். இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய தொகைக்கு வணிகம் செய்தது ரஜினி மற்ரும் அஜித், விஜய் படங்கள் மட்டுமே. இதன் காரணமாக சிவாகார்த்திகேயன் தல, தளபதிக்கு போட்டியாகிவிட்டார் என ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.