விஜய்யால் சூர்யாவிற்கு கிடைத்த வாய்ப்பு.! பிரம்மாண்ட படத்தில் நடிக்க போகிறார்.!

0
900
Vijay-surya
- Advertisement -

சர்கார் படத்திற்கு பிறகு நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அதே போல நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும், கே வி ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் சசி குமார் இயக்கப்போகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த படத்தில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம் ஆனால், சிலபலகாரணங்களால் அவரை இந்த படத்தில் கமிட் செய்ய முடியவில்லையாம்.

- Advertisement -

இதையடுத்து இந்த படத்தில் நடிக்க சூர்யாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் அதற்கு சூர்யா ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அதிக பொருட்செலவில் எடுக்க இயக்குனர் சசி குமார் திட்டமிட்டுள்ளாராம்.

சமீபத்தில் பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்பதை இயக்கிய ராஜமௌலியை சந்தித்தார் சசி குமார். இந்த சந்திப்பின் போது தனது படத்திற்காக ராஜமௌலியிடம், சசி குமார் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படம் உறுதியானால் நடிகர் சூர்யாவின் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பிருக்கும்.

-விளம்பரம்-
Advertisement