விளையாட்டு வீராங்கனையான தன் மகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரரை மனம் முடிக்க இருக்கும் தலைவாசல் விஜய்.

0
1723
babaaprajith
- Advertisement -

தலைவாசல் விஜய்யின் மக்கள் பிரபல கிரிட்கெட் வீரரை திருமணம் செய்ய இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் தலைவாசல் விஜய். இவர் திரைப் பட நடிகர் மட்டுமல்லாமல் குரல் ஒலிச்சேர்க்கை கலைஞரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவர் சினிமா உலகில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த “தலைவாசல்” என்ற படத்தில் தான் முதன் முதலாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு பிறகு தான் இவரை ‘தலைவாசல் விஜய்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இவர் தன்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சினிமா படங்களில் நடிகர், குணச்சித்திர நடிகர், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அதோடு தலைவாசல் விஜய் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ‘கவலைப்படாதே சகோதரா’ என்ற பாடல் தான்.

- Advertisement -

தலைவாசல் விஜய் திரைப்பயணம்:

இந்த பாடல் இன்னும் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் இடம் பிடித்து இருக்கிறது. மேலும், நடிகர் தலைவாசல் விஜய் அவர்கள் கடைசியாக 100% காதல் என்ற திரைப் படத்தில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘அழகு’ சீரியலில் நடித்து இருந்தார். இந்நிலையில் தலைவாசல் விஜய்யின் மகள் நீச்சல் போட்டியில் தங்கம் பெற்று இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தலைவாசல் விஜய் மகள்:

தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா. இவர் நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் சிறு வயதிலிருந்தே நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்று இருக்கிறார். நேபால் தலை நகரமான காத்மாண்டுவில் 13வது தெற்காசிய போட்டி நடை பெற்றது. இந்த போட்டியில் பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி இருந்தார்கள். இந்தியா சார்பில் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணாவும் நீச்சல் போட்டியில் பங்கேற்று விளையாடி இருந்தார். இந்தநிலையில் தான் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா பிரபல கிரிக்கெட் வீரரான பாபா அபராஜித்தை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

பாபா அபராஜித் :

பாபா அபராஜித் தமிழ் நாட்டை சேர்ந்தவர் இவர் தன்னுடைய 17 வயதில் ரஞ்சி ட்ராபியில் தமிழ் நாட்டின் கிரிக்கெட் அணிக்காக விளையாடி அறிமுகமாக்கினார். பின்னர் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயத்துக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றியடைவதற்கு காரணமாக இருந்தார். மேலும் 2013 ஆண்டு நடைபெற்ற துலிப் ட்ராபியில் இரட்டை சதம் அடித்து கலக்கினார். தற்போது இவர் இந்தியாவின் A அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்து வருகிறார்.

நிச்சயதார்தம் :

இப்படிப்பட்ட நிலையில் தலைவாசல் விஜய்யில் மூத்த மகள் ஜெயவீணாவைத்தான் பாபா அபராஜித்திற்கு பேசி நித்சயதார்தம் முடிந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஜெயவீணை நீச்சல் வீராங்கனை என்பது பல பதக்கங்களை வென்றிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இப்படி பட்ட நிலையில் தான் பாபா அபராஜித – ஜெயவீனா திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement