தளபதி 67னின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – யார் யார்லாம் இருக்காங்க பாருங்க.

0
694
thalapathy67
- Advertisement -

தளபதி 67 படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. அதாவது துணிவு தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் வாரிசு விநியோகஸ்த்தர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தங்களுடைய படங்கள் தான் இந்த பொங்கலின் “உண்மையான வெற்றியாளர்” என்று சோசியல் மீடியாக்களில் அறிவித்தனர்.

-விளம்பரம்-

இது ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போலாகி இணயவாசிகளுக்கு இடையே பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் தான் வாரிசு படம் 7 நாட்களில் 210 கோடியை வசூல் செய்துள்ளது நன்பா என்று அதிகாரப்பூர்ப அறிவிப்பை கொடுத்தது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்த நிலையில் விஜய் வாரிசு பட வெற்றிக்கு நட்சத்திர விடுதியில் படக்குழுவினருக்கு விருந்து வைத்தார்.

- Advertisement -

மேலும் இந்த விருந்தில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி படிப்பள்ளி, கணேஷ், ஷாம், சரத்குமார் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் சில சர்ச்சையான விமர்சனங்களை இயக்குனர் வம்சி மற்றும் சரத்குமார் கூறியது வைரலாகி இருந்தது. இதனையடுத்து அவ்ர்கள் வெளியிட்டிருந்த பதிவில் தங்களின் படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் 210 கோடி வசூல் செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிதான ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் விஜய்யின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான “மாஸ்டர்” படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தளபதி 67 படத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. மேலும் இது குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் வாரிசு படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ், பத்திரிகையாளரை சந்தித்த போது படம் பார்க்க மிகவும் ரெஃப்ரெஷிங்காக இருந்தது. இந்த படத்தின் ரிலீஸுக்காகதான் வெயிட்டிங்கில் இருந்தேன். விரைவில் தளபதி 67 படத்திற்கான தேதி குறித்த அறிவிப்பை நான் சொல்வேன்” என்று கூறி இருந்தார். மேலும் தளபதி 67 விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் படத்தில் மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளர் ஆக மனோஜ் பரமஹம்சாவும், படத்தின் சண்டை பயிற்சியாளர்களாக மாஸ்டர், கைதி போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்த அன்பறிவும் கலை இயக்குனர் சதீஷ்குமாரும், நடன இயக்குனரக தினேஷ்ஷும் பணியாற்ற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ஆடை இயக்குனர் ரத்தினகுமார் ஜெயராஜ் வைதி போன்றவர்கள் வசனம் எழுத இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Advertisement