‘குழந்தை அமைப்பு இருக்குமான்னு தெரியாது ஏன் அழுதீங்க’ – பிக் பாஸுக்கு பின் முதன் முறையாக சொன்ன ரச்சிதா.

0
680
rachitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒரு புதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சீசனில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தனர். அதில் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதாவும் ஒருவர். ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ரச்சித்தாவிற்கு ஆதரவாக இருந்த தினேஷ் :

ஆனால், இதுகுறித்து பேசிய தினேஷ் ன்னை பொறுத்தவரைக்கும் எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நான், ரக்ஷிதா இருவரும் ஒரு சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.என்னதான் தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தாலும் ரச்சித்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

கணவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத ரச்சிதா :

அதே போல ரச்சித்தா பிக் பாஸிற்கு செல்வதற்கு முன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து மெசெஜ் அனுப்பி இருக்கிறார் தினேஷ், ஆனால் அதனை பார்த்தும் ரச்சித்தா எந்த பதிலையும் அனுப்பவில்லை என்று பேட்டி ஒன்றில் பேசி இருந்தார் தினேஷ். இருந்தும் பிக் பாஸில் விளையாடிவந்த ரச்சித்தாவிற்கு கடைசி வரை ஆதரவாக தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தார் தினேஷ். ஆனால், தனது கணவர் குறித்து பிக் பாஸில் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்து வந்தார் ரச்சிதா.

-விளம்பரம்-

குழந்தையை நினைத்து அழுத ரச்சிதா :

பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது அனைவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதி அதை படித்துக்காட்டி கொண்டு இருந்தனர். எனக்கு குழந்தை அமைப்பு இருக்கிறதா என்று கூட எனக்கு தெரியாது. என்னுடைய அம்மா தான் என்னுடைய குழந்தை. அந்த கடவுள் அந்த குழந்தையை எனக்கு கடைசி வரை கொடுக்க வேண்டும். இதற்குப் பின்னர் இனி எனக்கு நீ உனக்கு நான் என்று வாழ்வதற்கு தயாராக இருக்கிறேன் அம்மா’ என்று கண்ணீர் மல்க அந்த கடிதத்தை படித்திருந்தார்.

குழந்தை ஏக்கம் :

அதே போல ஒரு எபிசோடில் விக்ரமனிடன் பேசிய ரச்சிதா, நான் என்னோட 35 வது வயதில் தான் ஒரு குழந்தையை தத்து எடுப்பேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின்னர் ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்ற ரச்சிதா ‘குழந்தை என்றாலே எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஆசை தான் எனக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் பெண் குழந்தைகளை பார்த்தாலே நான் வீழ்ந்து விடுவேன் குழந்தைகளை எப்படி பார்க்கிறேனோ அதேபோலத்தான் இங்கு இருக்கும் பெரியவர்களையும் பார்க்கிறேன்’ என்று பேசி இருக்கிறார்.

Advertisement