“நீட் மரணங்களை வைத்து முதல்வர் அரசியல் செய்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளது” – அண்ணாமலையின் குற்றச்சாட்டு.    

0
648
- Advertisement -

நீட் தேர்வை வைத்து முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை தினமும் ஒரு பிரச்சனை அரிவாள் வெட்டு, கவுன்சிலருக்கு வெட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று தான் வருகிறது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையில் குற்றம்சாட்டியுள்ளார். ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் நேற்று மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா. பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி .வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்கள்  வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

அண்ணாமலை பேசியது:

நேற்று நடைபெற்ற பாதயாத்திரையில் தமிழக முதல்வர் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்து வருகிறார். அவ்வாறு அரசியல் செய்ய வேண்டாம் என்று அண்ணாமலை முதல்வரிடம் கேட்டு கொண்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக நீட் தேர்வு எழுதி  மருத்துவ படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

நீட் தேர்வில் தோல்வியடைந்தால் ஒரு மாணவனும் அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் முதல்வர் அதை வைத்து அரசியல் செய்து வருகிறார். நீட் தேர்வை வைத்து முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை தினமும் ஒரு பிரச்சனை அரிவாள் வெட்டு, கவுன்சிலருக்கு வெட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்று தான் வருகிறது.

கஞ்சாவை கட்டுபடுத்துவதில் திமுக அரசு தோல்வியை தழுவியுள்ளது. தமிழக அரசு காவல் துரையின் கைகளை கட்டி போட்டு அவர்களுக்கு சாதகமாக செயல் படுத்துகிறது அதனால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. இது வரை 29 தொகுதிகளுக்கு சென்றுள்ளேன் அணைத்து இடத்திலும் மக்களின் எழுச்சியை காண முடிந்தது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தேசிய ஜனயனாக கூட்டணி வெற்றி பெரும் என்றும் அவர் கூறியிருந்தார்.            

Advertisement