அனுஷ்கா ஷெட்டி அண்ணனை கொலை செய்ய திட்டம், போலீசில் புகார். அவர் அண்ணன் என்னவாக இருக்கிறார் தெரியுமா ?

0
581
anushka
- Advertisement -

பிரபல நடிகை அனுஷ்காவின் சகோதாரை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக போலீஸ் மந்திரிக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. தெலுங்கு திரையுலகில் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சூப்பர்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நாகர்ஜுனா நடித்திருந்தார். இப்படத்தில் நடிகைகள் ஆயிஷா டகியா மற்றும் அனுஷ்கா ஷெட்டி என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம் இதனைத் தொடர்ந்து சுமனின் ‘மகா நந்தி’, ரவி தேஜாவின் ‘விக்ரமார்குடு’, விஷ்ணு மஞ்சுவின் ‘அஷ்ட்ரம்’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.

-விளம்பரம்-

அதன் பிறகு தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அனுஷ்கா ஷெட்டி, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். தமிழில் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘இரண்டு’. இது தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக மாதவன் நடித்திருந்தார்.

- Advertisement -

அனுஷ்காவின் திரைப்பயணம் :

‘இரண்டு’ படத்துக்கு பிறகு ‘வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி’ போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷெட்டி.இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அனுஷ்கா ஷெட்டிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அனுஷ்காவின் அண்ணன்கள் :

இடையில் கொஞ்சம் கொண்டாக மாறி இருந்த அனுஷ்கா, யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தார். நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு இரண்டு அண்ணன்கள் இருப்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். ஆம், நடிகை அனுஷ்காவிற்கு குனரஞ்சன் ஷெட்டி மற்றும் சாய் ரமேஷ் ஷெட்டி என்ற இரண்டு அண்ணன்கள் இருக்கின்றனர். இதில் ஒரு அண்ணனா குனரஞ்சன் ஷெட்டி ஜெய கர்நாடக என்ற கட்சியில் இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகி

மற்றொரு அண்ணனான சாய் ரமேஷ் ஷெட்டி, காஸ்மெட்டிக் சர்ஜனாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாக கூறி, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு, ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். அதே நேரத்தில் குணரஞ்சன் ஷெட்டியும் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும், கவனமுடன் இருக்கும்படியும் ஒரு போலீஸ் அதிகாரி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

கொலை திட்டத்தின் பின்னணி :

முத்தப்பா ராயின் மற்றொரு நெருங்கிய ஆதரவாளரான மன்னுத் ராய்க்கும், குணரஞ்சன் ஷெட்டிக்கும் இடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மன்னுத் ராய், குணரஞ்சன் ஷெட்டியை கொலை செய்ய திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை மன்னுத் ராய் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. போலீஸ் விசாரணை நடத்தினால் உண்மை வெளியே வரும் என்று மன்னுத் ராய் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement