‘வாத்தி’யின் பாடம் எடுபட்டதா ? இதோ முழு விமர்சனம்

0
995
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் “வாத்தி”. இப்படத்தில் வெங்கி அட்லூரி இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகை சம்யுக்தா தனுஷுக்கு ஜோடியாக நடிக்க, மொட்டை ராஜேந்திரன், சமுத்திரக்கனி, கென் கருணாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிற இந்த படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

பொதுவாக ஒரு சாதாரண மனிதன் மக்களை காக்கும் வேலையில் ஈடுபட்டு பெரிய ஹீரோவாக மாறும் கதைக்கு எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பது வழக்கம் தான். அந்த வகையில் உருவாகியுள்ள திரைப்படத்தில் தான் தனுஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்தில் மூன்று மாணவர்கள் பழைய விசிடி மூலம் படத்தைச் சொல்ல ஆரம்பிக்கின்றனர் அதாவது 90ஸ்களின் தொடக்க காலகட்டத்தில் பள்ளிகளை தனியார் மயமாக்கும் கொள்கை தொடங்கியது. பொறியியல் மருத்துவம் போன்ற கல்விகள் வியாபாரமாக்கும் நோக்கத்தில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை மூடினர். இதனை எதிர்த்து மக்கள் போராடும் போது அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக வருகிறார் சமுத்திரக்கனி.

- Advertisement -

ஆனால் அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம் மற்றும் முற்றம் தர ஆசிரியர்களை வைத்து கல்வி கொடுக்க நினைக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க பெற்றோர் ஆதரவு மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இல்லாத அரசு பள்ளியில் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று வருபவர் தான் நடிகர் தனுஷ் (பாலா). இவர் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் எப்படி மாற்றுகிறார்? சமுத்திரக்கனியின் திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் மீதி கதையாக இருக்கிறது.

இந்த படத்தில் கூறும் கதை பல படங்களில் நான் பார்த்து சளித்ததுப்போன கதைதான். ஆனாலும் கதையை நேர்தியாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் அட்லூரி. படத்தில் வாத்தியாராக வரும் தனுஷ் நடிப்பில் பின்னியிருக்கிறார். அதே போல கதாநாயகி மீனாட்சியாக வரும் நடிகை சம்யுக்தாவும் தனுஷுக்கு இணையாக நடித்திருக்கிறார். ஆனால் படத்திற்கு முக்கியமாக தேவையான வில்லன் கதாபாத்திரம் சரியாக அமையவில்லை. சமுத்திரக்கனி திரையில் தோன்றுவது அழுத்தமாக இல்லாதது குறை.

-விளம்பரம்-

படத்தில் சில லாஜிக் குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க வித்தியாசமான முறைகளை கையாளுவது, பாடம் சொல்லித்தர திரையரங்கை பயன்படுத்துவது போன்றவவை செயற்கைத்தனமாக இருந்தது. தனியார் பள்ளிகளில் நடக்கும் அட்டூழியங்களை இந்த படம் காட்டுமா என்றால் அதற்கு ஏமாற்றமே பதில். ஏனென்றால் எந்த ஒரு காட்சியும் அழுத்தமாக இல்லை.

ஒரே ஒரு காட்சியில் மட்டும் பாரதிராஜா வருகிறார். ஆனால் கென் கருணாஸ் எதற்கு வருகிறார் என்று தெரியவில்லை. மற்றபடி பின்னணி இசையமைப்பில் எப்போதும் போல மாஸ் காட்டியிருக்கிறார் ஜி.வி பிரகாஷ் ஆனால் பாடல்கள் சரியாக பொருந்தவில்லை. ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. மற்றபடி பல காலமாக அரைத்த மாவைத்தான் இப்போதும் இந்த படத்தில் அரைத்து வைத்திருக்கின்றனர்.

குறை :

திரைக்கதை சரியாக பொருந்தவில்லை.

வில்லன் கதாபாத்திரம் வலுவில்லை.

புளித்துபோன கதை.

நிறை :

தனுஷ் நடிப்பு எப்போதும் போல சூப்பர்.

சொல்லவரும் கருத்து ஓகே.

பின்னனி இசை பரவாயில்லை

மொத்தத்தில் “வாத்தி” நல்ல கருத்தை கூறவரும் தெலுங்கு பட உணர்வை கொடுத்து.

Advertisement