லெஸ்பியன்களாக நடித்தது குறித்து நடிகைகள் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தன்பாலின ஈர்ப்பாளர்களின் கதையை மையமாக வைத்து படங்கள் வெளியாகி வருகிறது. இந்த படங்கள் குறித்து சர்ச்சைகள் வந்தாலும் பலர் இந்த படத்திற்கு ஆதரவாக கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போதுஇயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாழ்வு தொடங்கும் இடம் நீதானே.
இந்த படத்தை நடிகை நீலிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு தர்ஷன் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்று ஷார்ட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஆண் பெண்களுக்கு இருக்கும் சுதந்திரத்தைப் போல தன் பாலின ஈர்ப்பாளர்களின் உணர்வுகளையும் மதித்து அவர்களுக்கும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்ற மையக்கருத்தை வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே படம்:
மேலும், இந்த படத்தில் ஒரு இஸ்லாமிய பெண்ணும், ஒரு இந்து பெண்ணும் லெஸ்பியனாக இருப்பதால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதை. இதில் லெஸ்பியன்களாக ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக இந்த படத்தின் நடிகைகள் பேட்டி அளித்திருக்கிறார்கள். அதில் ஸ்ருதி பெரியசாமிகூறியிருப்பது, இந்த படத்தின் கதை இயக்குனர் சொல்லும் போது எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.
ஸ்ருதி பெரியசாமி சொன்னது:
நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் இந்த துறையில் பணியாற்றுபவர்கள் பலர் ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன் என்று கூறியிருந்தார். இவரை அடுத்து நிரஞ்சனா கூறியிருப்பது, சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தான் சமீப காலமாக படமாக எடுத்து வருகிறார்கள்.
நிரஞ்சனா கொடுத்த பதில்:
ஒரு நடிகையாக இயக்குனர் சொன்னதை நான் செய்தேன். அதற்காக அந்த படத்தின் கருத்தோடு இயக்குனரின் கருத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் லெஸ்பியன் ஆதரவாளரா? என்று கேட்கிறார்கள். படத்தில் ஒருவர் கொலைகாரனாக நடித்தால் அவர் கொலைக்கு ஆதரவாளராக கருத முடியுமா? இந்த படம் ஒரு பிரச்சனையை பேசி இருக்கிறது. மற்றபடி தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்ப வேண்டாம் என்று கூறுகிறார்.
நீலிமா அளித்த விளக்கம்:
இவர்களை தொடர்ந்து தயாரிப்பாளரும் நடிகையுமான நீலிமா கூறியிருப்பது, இந்த திரைப்படம் மைக்ரோ பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. முதலில் இந்த கதையை படமாக உருவாக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. என்னுடைய கணவர் அவசியம் வேண்டும். காரணம் தற்போது இந்த சமூகம் மற்றும் சமுதாயம் சொல்லும் பாதையில் இதுபோன்ற விஷயங்கள் உள்ளடங்கி இருக்கிறது. நல்ல படைப்பிற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு வழங்க வேண்டும் இந்த சமூகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இந்த படம் இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.