தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சரத்குமார். இவரது மகள் தான் நடிகை வரலக்ஷ்மி. தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘போடா போடி’. இந்த படத்தினை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் டூயட் பாடி ஆடியிருந்தார். இது தான் வரலக்ஷ்மி சரத்குமார் ஹீரோயினாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம்.
இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் சுதீப்பின் ‘மாணிக்யா’ மற்றும் மலையாளத்தில் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியின் ‘கசபா’ என இரண்டு படங்களில் நடித்தார் வரலக்ஷ்மி சரத்குமார். அதன் பிறகு தமிழில் சசிக்குமாரின் ‘தாரை தப்பட்டை’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘விக்ரம் வேதா’, ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘நிபுணன்’, சிபிராஜின் ‘சத்யா’, கெளதம் கார்த்திக்கின் ‘Mr. சந்திரமௌலி’, சத்யராஜின் ‘எச்சரிக்கை’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, ‘தளபதி’ விஜய்யின் ‘சர்கார்’, தனுஷின் ‘மாரி 2’, ஜெய்யின் ‘நீயா 2’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் வரலக்ஷ்மி சரத்குமார்.
இதையும் பாருங்க : ஆதவன் படத்தில் வந்த இந்த காட்சியில் கயிறுல செஞ்ச தவற கவனீசீங்களா. இதான் அது.
தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த தெலுங்கு திரைப்படம் ‘தெனாலி ராமகிருஷ்ணா BA.BL’. இதில் கதையின் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி டூயட் பாடி ஆடியிருந்தார்.
இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வலம் வந்திருந்தார் வரலக்ஷ்மி சரத்குமார். இது தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தெலுங்கு சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கென ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, வரலக்ஷ்மி சரத்குமார் அளித்த பேட்டி ஒன்றில் “நான் ‘போடா போடி’ படத்தில் நடிப்பதற்கு முன்பே பல படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது.
இதையும் பாருங்க : அதை தாங்க முடியாமல் இதை செய்தேன் – நீண்ட காலத்திற்கு பின் சுச்சி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த சுசித்ரா.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்க என்னை அணுகினார்கள், அதுக்கான ஸ்க்ரீன் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டது. அதன் பிறகு பிரபல இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. அதேபோல, முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடிக்கவும் என்னிடம் பேசினார்கள். ஆனால், அப்போது எனது அப்பா தான் ஸ்ட்ரிக்ட்டா இப்போ நடிக்க வேண்டாம்னு சொல்லிட்டார்” என்று வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.