முருகதாஸ் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்! யார் ஹீரோ தெரியுமா?

0
10502
murugadoss

வரும் தீபாவளிக்கு மெர்சல் படம் வெளிவர உள்ள நிலையில் அந்த படத்தை அடுத்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் அவர்களின் படத்தில் நடிகர் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.

Actor Vijayஅதே போல ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஸ்பைடர் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முருகதாஸ் , விஜய் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் ஒரு படத்தை இயக்குவதாக இருந்ததாம். தமிழ், தெலுங்கு என இரு மொழுகளில் அதை வெளியிட முடிவுசெய்தார்களாம்.

Actor Vijayதமிழில் விஜய் ஹீரோவாகவும், மகேஷ் பாபு வில்லனாகவும், தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாகவும், விஜய் வில்லனாகவும் நடிக்க இருந்ததாம். தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்தால் மட்டுமே நான் வில்லனாக நடிப்பேன் என்று விஜய் முருகதாசிடம் அப்போது தெளிவாக கூறினாராம்.

Mersal-Vijayஆனால் சில காரணங்களாம் அந்த படம் தள்ளிப்போனது என்று முருகதாஸ் கூறியுள்ளார். இந்த படம் விரைவில் ஆரமிக்க பட்டால் , ரஜினி மற்றும் மம்முட்டி நடித்த தளபதிய படத்தை போன்று பயங்கர மாசாக இருக்கும் என்பது விஜய் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.