தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தை இயக்கி கொண்டிருக்கும் இயக்குநர் ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ்.
அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க : 2018-ல 400 பள்ளிகளுக்கு இதை செய்வேனு சூர்யா சொன்னாரரே அது என்னாச்சி ? பிக் பாஸ் நடிகை கேள்வி.
திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.
கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் நிதியுதவி கொடுத்து வந்தனர். நடிகர் ‘தளபதி’ விஜய்யும் கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியிருந்தார். அதுமட்டுமின்றி, நடிகர் விஜய் ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.5000 பணம் அனுப்பி அவர்களுக்கு பேருதவி செய்திருந்தார்.
இதையும் பாருங்க : ‘பிரபாகரன் தமிழின் அடையாளம்’ மலையாள பட காட்சியால் ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ்டேக்- மன்னிப்பு கேட்ட படக்குழு.
தற்போது, மதுரையைச் சேர்ந்த நாகராஜ் (நடிகர் ‘தளபதி’ விஜய் ரசிகர்) என்பவர், நடிகர் விஜய் அவருக்கென அனுப்பிய அந்த ரூ.5000 பணத்தை அவரது மாற்றுத்திறனாளி நண்பர் சசிக்குமாருக்கு கொடுத்து உதவி செய்திருப்பதாக தகவல் வெளி வந்திருக்கிறது. மாற்றுத்திறனாளி சசிக்குமார் நடிகர் ‘தல’ அஜித்தின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய். இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருக்கின்றது. ஆனால், அது ‘தல’ அஜித் மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகிய இருவரின் ரசிகர்கள் இடத்தில் இல்லை. அதுவும் சமூக வலைத்தளம் தான் அவர்கள் மோதிக் கொள்ளும் இடமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் அஜித் ரசிகருக்கு உதவியிருப்பது, அவர்களின் மற்ற ரசிகர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.