நடிகர் சங்க நிகழ்ச்சி, பணத்தை ஏமாற்றபார்த்த ஸ்பான்சரை பொழுந்துள்ள கேப்டன் – நீயா நானாவில் பகிரப்பட்ட சுவாரசியம்.

0
1246
- Advertisement -

தமிழ்நாட்டின் கேப்டன் விஜயகாந்த் இறப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .

-விளம்பரம்-

விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். ஆனால், சில பிரபலங்கள் வர வில்லை. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.

- Advertisement -

விஜயகாந்த் இறப்பு:

அதோடு பிரபலங்கள் பலர் நேரடியாக வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத காரணத்தால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி, அவருடைய தந்தை சிவக்குமார், சூர்யா, செந்தில்-ராஜலக்ஷ்மி என பல பிரபலங்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க பேசி இருந்தார்கள். இந்த நிலையில் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் விஜயகாந்திற்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது.

விஜயகாந்துக்கான சிறப்பு நிகழ்ச்சி:

அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விஜயகாந்த் குறித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபலம் ஒருவர், நடிகர் சங்கம் கடனை தீர்ப்பதற்காக சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் விஜய்காந்த் அவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஒரு தயாரிப்பு நிறுவனம் பணத்தை ஏமாற்றப் பார்த்தது. எவ்வளவு பேசியும் முடியவில்லை. பின் விஜயகாந்த் வந்து அவரை சுவற்றில் தூக்கி நிறுத்திட்டார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் செய்த செயல்:

அப்போது சிசிடிவி கேமரா எல்லாம் இருந்தது. பணத்தை ஏமாற்றியவர் கேமரா இருக்கிறது, போலீசில் சொல்லி விடுவேன் என்றெல்லாம் மிரட்டி இருக்கிறார். அதற்கு விஜயகாந்த், தப்பு செய்த உனக்கே பயம் இல்லாத போது தப்பு செய்தவனை கண்டுபிடித்த எனக்கு எந்த பயமும் இல்லை. உண்மையை ஒத்துக் கொள்கிறாயா? இல்லையா? பணம் திருடியது நீதானே? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

உடனே அவர் வேறு வழியில்லாமல் தான் செய்து தவறை ஒத்து கொண்டார். அவர் எதற்காகவும் தைரியத்தையும் துணிச்சலையும் விடாதவர். எல்லோருமே பயந்து ஒதுங்கி நின்ற போது துணிச்சலாக மொத்தமாக நின்ற தலைவர் என்று அவரைப் பற்றி பேசி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement