‘இதைவிட பெரிய வெற்றி என்ன கொடுத்து விட முடியும்’ – அஸீமிற்கு முன்பாக விக்ரமன் வெளியிட்ட முதல் வீடியோ.

0
156
vikraman
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன்கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறிஇருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.

-விளம்பரம்-

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார்.இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகிஇருந்தனர். ஒருபுறம் அசின் வெல்வார் என்றும் மறுபுறம் விக்ரமன் வெல்வார் என்றும் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார்.

- Advertisement -

விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து இருக்கின்றனர்.

இவரை தொடர்ந்து விக்ரமன் இரண்டாம் இடமும் ஷிவினுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்பட்டது. முதல் இடத்தை பிடித்த அஸீமிற்கு 5000000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கட்சியின் உறுப்பினரும் ஜார்னலிஸ்டுமான ஒரு நபர் கலந்துகொண்டு இருப்பது இதுவே முதல் முறை. அவர் தான் விக்ரமன்.

-விளம்பரம்-

தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார். ஆனால், நாட்கள் போக போக பல சமுதாய கருத்துக்களை சொல்லியதோடு, எந்த ஒரு இடத்திலும் சமநிலை தவறாமல் கண்ணியமாக நடந்துகொண்டார். இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து இவர் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அசீம் பட்டத்தை தட்டி சென்றார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் விக்ரமன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் காண்பித்த அன்பிற்கு நன்றி. பொங்கல் அன்று வீட்டிற்கு முன்னர் போட்ட கோலத்தில் கூட அறம் வெல்லும் என்றெல்லாம் போட்டு இருக்கிறீர்கள். இதைவிட பெரிய வெற்றி என்ன கொடுத்து விட முடியும். உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி, இருந்தாலும் உங்கள் மனநிலை என்ன என்பதை நான் உணர்கிறேன். இது நன்றி சொல்வதற்காக மட்டும் போடும் வீடியோ அல்ல விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்’

Advertisement