இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் இந்த பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட வரவுள்ளது.இந்த இதே நாளில் வருவது, விஸ்வாசம் படத்திற்கு பின்னடைவு என்று கருதினார்கள்.
ஆனால், விஸ்வாசம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான நாளில் இருந்தே இந்த படத்திற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புள்ளது என்று அனைவரும் தெரிந்து கொண்டனர். பேட்ட என்று விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுகும் இடையே திரையரங்குகளை பிடிக்க கடும் போட்டி நிலவியது.
அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் பேட்ட படம் தான் அதிக திரையரங்கை கைபற்றியது என்ற சில தகவலும் வெளியாகி இருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் பேட்டயை விட விஸ்வாசத்திற்கே அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கனா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மட்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கபட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் ஜனவரி 26-ம் தேதிக்கு படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கபட்டுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆந்திராவில் தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.