-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

அப்படி செய்ய அவனுக்கு எவ்ளோ தைரியம் இருக்கும் – கேப்டன் மில்லர் விழாவில் நடந்த சம்பவம் குறித்து ஐஸ்வர்யா விளக்கம்.

0
658

கேப்டன் மில்லர் விழாவில் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட தனுஷ் ரசிகர் ஒருவரை தொகுப்பாளினி ஐஸ்வர்யா தாக்கி இருக்கும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தில் சிவராஜ்குமார், சுந்திப் கிஷன், பிரியங்கா மோகன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த படத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐஸ்வர்யா ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். மேலும், நிகழ்ச்சி முடிந்த பின்பு மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த தனுஷை பார்க்க அவருடைய ரசிகர்கள் பலரும் முட்டி மோதி வந்திருக்கிறார்கள்.

அப்போது அருகில் இருந்த ஐஸ்வர்யாவை தனுஷ் ரசிகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா, அவரை அடித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து செருப்பால் அடிப்பேன் என்று கூறி இருக்கிறார்.தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ‘கூட்டத்தில் என்னிடம் ஒருவன் தவறாக நடந்துகொண்டான். உடனே அவனை பார்த்து அவனை விடாமல் தொடர்ந்து அடித்தேன். ஆனால், அவன் ஓடிவிட்டான், இருந்தும் அவனை துரத்தி அவனை தப்பிக்கவிடாமல் இறுக்கி பிடித்துக்கொண்டேன். ஒரு பெண்ணுடைய அங்கத்தை பிடிக்க அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னை சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் இருந்தனர்.

-விளம்பரம்-

அதே போல நல்ல குடுமுடைய மரியாதையான மனிதத்ர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆனால், நம்மை சுற்றி இதுபோன்ற ஒரு சில அரக்கர்களும் இருக்கின்றனர் என்பதை நினைத்து பயமாகவும் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.ஏற்கனவே மன்சூர் அலிகான் படத்தின் சரக்கு படத்தின் விழா ஒன்றில் கூல் சுரேஷ் இவருக்கு மாலை போட்டது பெரும் சர்ச்சையானது. இதனை தொடர்ந்து மேடையில் மன்னிப்பு கேட்டதோடு தனியாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு மன்னிப்பு கேட்டார்.

அந்த விவகாரம் குறித்து பேசிய ஐஸ்வர்யா ‘ பொதுவாகவே இவருடைய நடவடிக்கைகள் எனக்கு பிடிக்காது அதனால் அவரை மேடையில் அழைக்கும் போது கூட வெறும் நடிகர் கூல் சுரேஷ் என்றுதான் கூப்பிடுவேன் ஆனால் அவர் எனக்கு யூடியூப் ஸ்டார் என்று பட்டம் இருக்கிறது அதைச் சொல்லி கூப்பிட மாட்டீர்களா என்று கேட்டார் அதனால் தான் இந்த முறை என் கழுத்தில் வேண்டும் என்று மாலை போட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது இன்னொரு முறை இதுபோல நடந்தால் ஒன்று கன்னத்தில் ஒரு அடியாவது கொடுப்பேன் இல்லாவிட்டால் போலீசில் புகார் அளித்து விடுவேன்என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news