ஆத்தி பைத்தியமா? ரம்யா வெளியிட்ட வீடியோ. கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
8478
Ramya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார் விஜே ரம்யா. பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ரம்யாவும் ஒருவர். இவர் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ்பெற்றவர். இவர் முதன் முதலாக விஜேவாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

-விளம்பரம்-
vj-Ramya

பின் ரம்யா அவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை ரம்யா அவர்கள் எப்போதும் தன்னுடைய ஃபிட்னஸ் விஷயத்தில் கண்டிப்பாக இருப்பார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ரம்யா அவர்கள் வீட்டை சுத்தம் செய்துகொண்டே நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், கொரோனா வைரஸின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கி உள்ளார்கள். வீட்டுக்குள் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலை என பல்வேறு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ரம்யா அவர்கள் தன்னால் முடிந்தவரை கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோவையும், உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களையும் அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனாலேயே சமூக வலைதளங்களில் இவருடைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது நடிகை ரம்யா அவர்கள் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் இருந்து “வாத்தி கம்மிங்” என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரம்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கையில் துடைப்பத்துடன் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு நடனமாடிக் கொண்டே வீட்டை சுத்தம் செய்கிறார். இந்த வீடியோவை தன்னுடைய அம்மா தான் எடுத்ததாகவும், என் அம்மாவிற்கு இது மாதிரி எத்தனை முறை வேண்டுமானாலும் வேலை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

நடிகை ரம்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டும், தன்னுடைய உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்தியும் வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இப்போ கொரோனா காரணமாக வீட்டில் இருப்பதால் வீட்டு வேலைகளை செய்து உடற்பயிற்சி செய்து வருகிறார். தற்போது நடிகை ரம்யா அவர்கள் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement