உலக கோப்பை அணிக்கு தேர்வான விஜய் சங்கர்.! கிண்டல் செய்து ட்வீட் செய்த அம்பதி ராயுடு.!

0
550
Ambathy-Rayudu

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மிடில் ஆர்டர் வரிசையில் விளையாடி வந்த அம்பதி ராயுடுக்கு இடம் கிடைக்கவில்லை.

ராயுடுவுக்கு சில வாய்ப்புகள் அளித்தோம், ஆனால் விஜய் சங்கர் முப்பரிமாணங்களை வழங்குகிறார், பேட் செய்வார், வானிலை மேகமூட்டமாக இருந்தால் பவுலிங் செய்வார், பிளஸ் அவர் ஒரு பீல்டர், நாங்கள் விஜய் சங்கரை4ம் நிலை வீரராகப் பார்க்கிறோம்” என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தன்னை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது குறித்து மவுனம் கலைத்த ராயுடு அது பற்றி நேரடியாக எதுவும் குறிப்பிடாமல் எம்.எஸ்.கே.பிரசாத், விஜய் சங்கர் பற்றி குறிப்பிட்ட 3டி ப்ளேயர் என்பதைச் சூசகமாகச் சுட்டிக் காட்டி தன் ட்விட்ட்ரில் கிண்டல் செய்துள்ளார் அம்பதி ராயுடு.

அதில், உலகக்கோப்பை போட்டியை பார்க்க நான் புதிய செட் 3டி கண்ணாடிகளுக்கு ஆர்டர் செய்துள்ளேன் தான் புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்தேன், உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காக” என்று சற்றே கிண்டல் செய்துள்ளதாகத் தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement