நீங்களா ? எனக்கே ஆச்சரியமா இருக்கே? கமலே ஆச்சாரியப்பட்ட இவர் யார் தெரியுமா ? இவரை பற்றி நீங்கள் அறியாத விஷயம்.

0
2402
balajimurugadoss
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சற்று முன்னர் கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பாலாஜி முருகதாஸும் இந்த சீஸனின் ரசிகர்களுக்கு பரிட்சையமில்லாத ஒரு முகம் தான்.

-விளம்பரம்-

தேனியில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான் மாடலிங் மீதிருந்த ஆர்வத்தால், இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கூட கலந்து கொண்டிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு இறுதிப் போட்டி வரை வந்தார். இருந்தாலும் இவரால் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இருப்பினும் 2018 ஆம் ஆண்டு இவர் மிஸ்டர் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார். அப்போது கமலை சந்தித்து நேரில் வாழ்த்து பெற்றுள்ளார் பாலாஜி. அதனால் தான் இவரை கடந்தும் நீங்களா என்று ஆச்சரியப்பட்டார் கமல். அதுமட்டுமில்லாமல் இவர் 2019 ஆம் ஆண்டு சரவதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

- Advertisement -

அதே போல இவர் 2017 ஆம் ஆண்டின் பிரபல டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் Mr. Perfect Body என்ற பட்டத்தை கூட வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலாஜி ஒருவர் கடந்த ஆண்டு மீனா நடிப்பில் வெளியான மெர்லின் காமாக்ஷி என்ற வெப்சீரிஸ் என்கூட நடித்திருக்கிறார். அந்த வெப் சீரிஸில் இவர் விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுபோக இவர் ஏற்கனவே ஆர்கே சுரேஷ் நடிப்பில் வெளியாக இருந்த டைசன் என்ற படத்தில் கமிட் ஆனதாக செய்திகள் வெளியானது . அந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2018 ஆண்டில் வெளியானது.

அதன் பின்னர் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படம் குறித்து பாலாஜி முருகதாஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தில் தான் ஒரு முக்கிய வில்லனாக நடிக்கிறேன் என்றும் இதற்காக 6 மாத காலம் குத்துச்சண்டை பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். மாடலிங் துறையில் இருப்பதால் எனக்கு நன்றாக உடல் அமைப்பு இருந்தும் குத்துச்சண்டை நுணுக்கங்களை கற்றுக் கொள்ள சற்று கடினமாக இருந்தது. ஒரு குத்துச்சண்டை வீரரின் போல தோன்ற வேண்டும் என்று அதற்காக நான் நிறைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்

-விளம்பரம்-
Advertisement