பிக் பாஸ்ல இவங்க மட்டும் தான் இப்படி ? ஷிவானி குறித்து கமல் சொன்ன அந்த விஷயம் – இதோ ஆதாரம்.

0
1708
shivani

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் சற்று முன்னர் கோலாகலமாக துவங்கியது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வரை ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ் என்று பலர் என்ட்ரி கொடுத்து விட்டனர். அந்த வகையில் இந்த சீசனில் இளசுகளின் சென்ஷேஷனல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ஷிவானி நாராயணன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது.

- Advertisement -

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர். ஷிவானி என்ட்ரி ஆன போது கமல் ஒரு விஷயத்தை கூறி இருந்தார்.

அது என்னவெனில் இந்த பிக் பாஸ் சீசனில் ஷிவானி தான் மிகவும் சின்னப்பெண் என்று. ஆம், அது உண்மை தான். இவர் 5.5.2001 -ல் பிறந்தவர் தான். இவருக்கு 19 வயது தான் ஆகிறது என்பது பலரும் நம்ப முடியாத ஒன்று. சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு 21 வயது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது எப்படி சாத்தியம் என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஷிவானி ‘ உன்னால ஜீரணிக்க முடியவில்லை என்றல் ஜெலுசில் குடி. மேலும், எனக்கு 19 வயது தான் ஆகிறது’ என்று பதில் கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement