யோகி பாபுவின் ‘ஜாம்பி’ படத்தின் பர்ஸ்ட் லுக்.! இத்தனை பிரபலம் இருக்கின்றார்களா.!

0
480

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியான விளங்கி வருகிறார் யோகி பாபு. பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் இவர் தற்போது கூர்கா, தர்ம பிரபு போன்ற படங்களில் லீடிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

அந்த வரிசையில் யோகி பாபு முன்னணி வேடத்தில் நடித்து வரும் படங்களில் ஒன்று ஜாம்பி. இந்தப் படத்தில் அவருடன் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் முக்கிய பிக்பாஸ் நடித்து வருகிறார். 

த்ரில்லர் காமெடி ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் புவன் இயக்குகிறார். பிரேம்ஜி அமரன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ள உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.  

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் யாஷிகா ஆனந்த், மெட்ராஸ் சென்ட்ரல் புகழ் கோபி-சுதாகர், பிஜிலி ரமேஷ் போன்றவர்களும் நடித்துள்ளனர்.