நடிகை நக்மா அவர்கள் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம், போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி என பல மொழி திரைப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். மேலும், நடிகை ஜோதிகாவை பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா?? அந்த அளவிற்கு அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையின் சகோதரி தான் நடிகை நக்மா அவர்கள்.
நக்மாவின் திரைப்பயணம்:
அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும் நக்மா உடைய கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. அதன் பின் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.நக்மா கடைசியாக நடித்த படம்:
பின் இடைப்பட்ட காலத்தில் கதாநாயகியாக வாய்ப்பை இழந்த நக்மா நீண்ட இடைவெளிக்கு பின் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘தீனா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் படத்தில் ஒரு சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நக்மா போஜ்புரி படங்களில் கவனம் செலுத்தி இருந்தார். மேலும், சிட்டிசன் படத்திற்கு பின்னர் இதுவரை எந்த ஒரு தமிழ் படத்திலும் நக்மாவை காண முடியவில்லை.நக்மாவின் சகோதரி:
மேலும், நடிகை நக்மா அவர்கள் ஜோதிகாவின் சகோதரி என்பது பலரும் தெரிந்த ஒன்று. ஜோதிகாவும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமா திரையுலகில் ஜோதிகா சாதித்த அளவிற்கு நக்மாவால் சாதிக்க முடியாமல் போய்விட்டது. அதோடு நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் நக்மா அரசியலில் குதித்து விட்டார்.திருமண வாழ்க்கை கூறித்து கூறிய நக்மா:
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நக்மா ‘ இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியும் நக்மாவும் காதலிப்பதற்காக தகவல்கள் 2000 ஆண்டுகளில் கிசு கிசுகள் வெளியாகி வந்தது. ஆனால் அப்போது கங்குலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது.ஆனாலும் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அது நடக்கவில்லை இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களின் பிரிவு குறித்து நக்மா ஒரு பேட்டியில் கூறுகையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை சரியாக அமையாது காலத்தில் கங்குலி பின்னடவை சந்தித்திருந்தார் அவர் பல்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தது. அவருடைய தோல்விக்கும் அவர் சரியாக விளையாடதற்கு நான் தான் காரணம் என்று கூறியிருந்தனர். எனவே இருவரின் பழக்கமும் யாருடைய சொந்த வாழ்க்கையும் பாதிக்க கூடாது என்று நாங்கள் புரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.