கவினை நாயுடன் ஒப்பிட்டு பேசியுள்ள அபிராமியின் தாய்.! என்ன கூறியுள்ளார் பாருங்க.!

0
3376
Kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்கும், சண்டைக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. அதே போல காதல் ஜோடிகளுக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. முதல் சீசனில் ஓவியா ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா மஹத், ஐஸ்வர்யா ஷாரிக் இப்படி பலர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் ஒரு புதிய லவ் ஸ்டோரி ஒன்று லேசாக தீப்பிடிக்க துவங்கியுள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-79.png

அது வேறு யாரும் இல்லை கவின் மற்றும் அபிராமி தான். தற்போது இவர்கள் இருவரது காதல் டாபிக் தான் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் மேல் இருக்கும் காதலை, கவினிடம் இன்று நேரடியாக சொன்னார் அபிராமி. அப்போது இங்கு இருக்கும் அனைவர்க்கும் உன் மீது நான் காதல் வைத்துள்ளது தெரியும் உனக்கு மட்டும் அது புரியவில்லையா என்று அபிராமி கேட்க, அதற்கு ஒன்றும் புரியாதது போல சிறிது நேரம் பாவலா செய்தார் கவின். இறுதியாக நாம் நண்பர்களாக இருப்போம் என்று நாகரீகமாக சொல்லிவிட்டார் கவின்.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள அபிராமியின் தாயிடம், அபிராமி – கவின் காதல் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள அவர், அபிராமி கவினை காதலிப்பதாக சொல்லவில்லையே, அபிராமிக்கு கவினை சரவணன் மீனாட்சி சீரியலில் இருந்தே கைவினை பிடிக்கும். அவருக்கு கவின் மீது இருப்பது கிரஸ் மட்டும் தான். கிரஷ் யார் மீது வேண்டுமானாலும் வரலாம், ரோட்ல போற நாய் மேல கூட கிரஷ் வரலாம் என்று பேசியுள்ளார்.

இதனால் கவின் ஆர்மி கடுப்பில் பொங்கி வருகிறது. கவினை நாயுடன் ஒப்பிட்டு பேசிய அபிராமியின் அம்மாவை ‘உங்க பொண்ண வேனா நாய் னு சொல்லுங்க ஆனா, மத்தவங்கள பேச உரிம கிடையாது.’ என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

உண்மையில் கவின், அபிராமியை காதல்பிப்பதாக ஒரு சின்ன உணர்வை கூட வெளிப்படுத்தவில்லை. அபிராமி, கவினிடம் காதலை சொன்ன போது ககூட உன்னுடைய உணர்வை நான் மதிக்கிறேன். ஆனால், என்னிடம் இன்னும் 15 நாள் பழகினால் என்னை உனக்கு பிடிக்காமலும் போகலாம் எனவே, நான் உன்னிடம் ஆசை வார்த்தை காண்பித்து உன்னை நோகடிக்க விரும்பவில்லை மிகவும் நாகரீகமாவே கூறினார்.

இப்படி இருக்க அபிராமியின் தாய், கவினை இப்படி தர குறைவாக பேசுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று ரசிகர்கள் அபிராமியின் அம்மாவை வறுத்தெடுத்து வருகின்றனர். எது எப்படியோ நாட்கள் செல்ல செல்ல கவினுக்கும் அபிராமியின் மீது காதல் மலர்ந்தாலும் அது நமக்கு ஆச்சார்யபடும் விஷயம் இல்லை.

Advertisement