பலரும் பாராட்டிய கதிர் நடனத்துக்கு அமுதவாணன் கொடுத்த பணம் – காரணத்தை கேட்டு கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
271
kathir
- Advertisement -

ஜனனிக்காக பிக் பாஸ் அமுதாவாணன் செய்தது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 59 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். தற்போது 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒரு சிலர் மட்டும் தான் மக்களுக்கு பரிச்சயமான நபராக இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன்:

அந்த வகையில் அமுதவாணனும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுகிறார். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டு வருகிறார். பின் இவர் ஜனனி உடன் கூட்டணி வைத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் அமுதவாணன்-ஜனனி:

அமுதவாணன் அதிகம் ஜனனியுடன் தான் பேசிக் கொண்டும், ஜனனியை கைப்பாவையாக மாற்றிக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் வீட்டில் உள்ள போட்டியாளர்களே கூறி இருக்கிறார்கள். அதோடு அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் ஜனனியும் செய்து வருகிறார். ஜனனிக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார். இதனால் அமுதவாணன் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறார். இந்நிலையில் ஜனனிக்காக அமுதாவாணன் செய்தது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். அதாவது, இந்த வாரம் மாறுவேட டாஸ்க்.

-விளம்பரம்-

சினமா பிரபலங்கள் கெட்டப் டாஸ்க்:

சினிமா பிரபலங்களின் கதாபாத்திரமாகவே போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் காசு கொடுத்து இருக்கிறது. யார் நன்றாக நடித்து நடனம் ஆடி இருக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால் போட்டியாளர்களும் ஒவ்வொரு நபராக பர்ஃபார்மன்ஸ் செய்யும்போது தங்களுக்கு விருப்பப்பட்ட பணத்தை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் கதிரவன் மைக்கேல் ஜாக்சன் கெட்டப் போட்டு நடனமாடி இருக்கிறார்.

அமுதவாணனை விமர்சிக்கும் ரசிகர்கள்:

இவருடைய நடனத்தை பார்த்து பலருமே பாராட்டி அதிகமாக பணம் கொடுத்திருந்தார்கள். ஆனால், அமுதவாணன் உங்களுடைய நடனத்தில் இருந்த பாவனை முகத்தில் சுத்தமாக இல்லை. முகபாவனை இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி 500 ரூபாய் கொடுக்கிறார். பின் சாய் பல்லவி ரோலில் ஜனனி வேடமடைந்து நடனமாடி இருக்கிறார். ஆனால், ஜனனி சூப்பராக நடனமாடி இருக்கிறார் என்று அவருக்கு 1500 ரூபாய் அமுதவாணன் கொடுத்திருக்கிறார். தற்போது இதை தான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் அமுதவாணனை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement