இலங்கை தமிழ் பிரச்சனையை இழுத்துவிட பாத்த அசீம் – எச்சரித்த பிக் பாஸ். வைரலாகும் குறும்படம்.

0
500
azeem
- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற நீதி மன்ற டாஸ்க்கில் தன் தமிழை தவறாக பேசிவிட்டார் என்று விக்ரமன் மீது ஜனனி வழக்கு தொடர்ந்த நிலையில் விக்ரமன் பேசியதை ஜனனியிடம் கூறி அவரை மூலை சலவை செய்து இருக்கிறார் அசீம் என்று நெட்டிசன்கள் குறும்படத்தை பகிர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 46 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, செரீனா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

21 போட்டியாளர்களில் இருந்து 6 போட்டியாளர்கள் போக தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பை தக்கவைத்து கொள்ள பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்குகளை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் கோர்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீதான குற்றங்களை குறித்து விவாதம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் டாஸ்க்:

அந்த வகையில் விக்ரமன், ஜனனி மொழி விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் நடத்தப்பட்டது அதில் இளவரசியாக ஜனனி இருந்தார். டாஸ்க் முடிவில் யார் சிறப்பாக செய்யவில்லை என்று பிக் பாஸ் கேட்டதற்கு விக்ரமன், ரக்ஷிதா – ஜனனி பெயரை குறிப்பிட்டு ஜனனி வந்து தமிழ் பேசுவதில், செம்மொழி பேசுவதில் சிரமம் என்று நினைக்கிறேன். அதனால் அவர் சரியாக பேசக்கூட வில்லை என்று கூறியிருந்தார். இதை இந்த வாரம் கோர்ட் டாஸ்க்கில் விவாதம் செய்து இருக்கிறார்கள்.

விக்ரமன்-ஜனனி விவாதம்:

அதற்கு விக்ரமன், நான் மொழி என்று தான் சொன்னேன். தமிழ் என்று சொல்லவில்லை என மாற்றி பேசி இருக்கிறார். அதற்கு ஜனனி உங்க தமிழ் என்று சொன்னிர்கள். அது கஷ்டமாக இருந்தது என்று விவாதம் செய்கிறார்கள். இதனால் குயின்சி, அசீம் இடையே விவாதம் நடக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் விக்ரமன் கடந்த வாரம் பேசிய வீடியோவை குறும்படமாக சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அதன் மூலம் விக்ரமன் மாறி மாறி பேசி இருப்பது தெளிவாக தெரிகிறது. இதனை அடுத்து நெட்டிசன்கள், எதற்கு இப்படி மாறி மாறி பேசுகிறீர்கள். சொல்லப்போனால், ஜனனி பேசுவது தான் செம்மொழி. ஆனால், அவருடைய பேசும் தமிழ் மொழியே புரியவில்லை, சரியில்லை என்று கூறியிருப்பதெல்லாம் தவறான ஒன்று. அப்போது ஒரு கதை, இப்போது ஒரு கதை சொல்லும் விக்ரமன் ஒரு சொம்பு தூக்கி என்றெல்லாம் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.

விக்ரமன் குறித்த கமெண்ட்:

ஆனால், நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து பலரும் விக்கிரமனுக்கு ஆதரவாக தான் பேசியிருந்தார்கள். நேர்மையானவர், அவருடைய பேச்சில் ஒரு நியாயம் இருக்கிறது என்றெல்லாம் அவருக்கு குரல் கொடுத்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த சீசனின் டைட்டில் வின்னர் கூட விக்ரமன் ஆக வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறியிருந்தார்கள். ஆனால், தற்போது வந்த குறும்படத்தின் மூலம் விக்ரமன் மீது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், விக்ரமன் ஜனனியின் தமிழை குறிப்பிடவில்லை என்றும் ஜனனியை இப்படி தூண்டிவிட்டதே அசீம் தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

அசீம் குறும்படம் :

மேலும், இந்த வழக்கு குறித்து ரூமில் பிக் பாஸ் இடம் தெரிவித்த போது அவர் இது மிகவும் சென்சிட்டிவான வழக்கு நீங்கள் எந்த ஒரு நாட்டையோ நாட்டு மக்களையும் தனிப்பட்ட வகையில் குறிப்பிடாமல் இங்கு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் வைத்து மட்டும் வாதாட வேண்டும் என்று பிக் பாஸ் கூறியுள்ளதாக அசிமே கூறியிருக்கிறார். மேலும், நான் விக்ரமனிடம் நீங்கள் இவர்களை தவறு என்று சொன்னால் அவரின் நாட்டையே தவறாக சொன்னதாக அர்த்தம் என்று ஒரே வார்த்தையில் கேட்டிருப்பேன். ஆனால், அது விக்ரமனுக்கு கெட்ட பெயராக இருக்கும் என்பதால் நான் சொல்லவிலை என்று கூறி இருக்கிறார்.

Advertisement