இறுதி வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள்.! யாருனு பாருங்க.!

0
9116
Bigg-bOss
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் இருந்துதர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும்7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும்.

-விளம்பரம்-

நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறி இருந்துதான் ரசிகர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்து இருந்தது. கடந்த வாரம் ஷெரின் தான் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டது மிகப் பெரிய ஏமாற்றமாக கருதப்பட்டு வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் விஜய் டிவியையும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் யாரை முதலில் சந்தித்துள்ளார் பாருங்க.! வைரலாகும் புகைப்படம்.!

- Advertisement -

அதேபோல இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள். முதல் சீசனில் ஆண்(ஆரவ்) டைட்டில் வின்னர் ஆகியிருந்த நிலையில் இரண்டாவது சீசனில் பெண்(ரித்விகா) டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். எனவே, இந்த சீசனில் வெற்றி பெறப் போவது ஆணா இல்லை பெண்ணா என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த நிலையில், இறுதி வாரம் என்பதால் மீரா மிதுன், மோகன் வைத்யா, ரேஷ்மா ஆகியோர் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement