விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடந்துள்ளது. இந்த வாரத்திற்கான முதல் எலிமினேஷன் யார் என்பது நாளை தெரிந்து விடும். அந்த வகையில் இந்த வாரம் பாத்திமா பாபு தான் வெளியேற போகிறார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.
1964 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த பாத்திமா பாபு தனது பயணத்தை தூதர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் தமிழில் ஜெயா டிவியில் பல ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இதையும் பாருங்க : சாண்டி அழுததை கண்டு கண்ணீர் விட்ட முன்னால் மனைவி காஜல்.!
தமிழில் 1996 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘கல்கி’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ், மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் ஏசியா நெட் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் மும்தாஜ் இருந்தது போல தற்போது பாத்திமா பாபு மற்ற போட்டியாளர்களை பெற்ற பிள்ளைகளை பார்த்து வருகிறார் அவர்களுக்குள் சண்டை வந்தாலும் அதனை நிதானமாக பேசி தீர்த்து சுமுகமாக முடித்து விடுகிறார் பாத்திமா பாபு. இதனால் இவருக்கும் ஆர்மிகள் துவங்கியுள்ளது.
பாத்திமா பாபு தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாத்திமா பாபு அஜித்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கபட்டது என்று கமெண்டில் கூறுங்கள்.