அட, பிக்பாஸை டைரக்ட் செய்வது இந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர் தானா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

0
585
Kamal
- Advertisement -

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்குவது சிவகார்த்திகேயன் பட இயக்குனர் என்ற தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன்முதலில் இந்தியில் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகரான சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து பிற மொழிகளிலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள். மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசீம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனர்:

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்குவது வேறு யாரும் இல்லைங்க, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் பிக் பாஸ் நிகழ்ச்சியை இயக்குவது குறித்து பெரிய சாமியிடம் கேட்டபோது அவர் கூறியிருந்தது, கமலஹாசனுக்கு இயக்குனர் என்ற ஒருத்தர் தேவையில்லை. இதுவரை நான் வேலை செய்ததிலேயே இவரை ஹேண்டில் பண்ணுவது ரொம்ப சுலபமாக இருந்தது.

-விளம்பரம்-

கமல் குறித்து சொன்னது:

அவர் ரொம்ப ஸ்வீட். புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு கமல் நடந்து கொள்கிறார். அவரால் எந்த ஒரு பிரச்சனையும், தாமதமும் வந்ததில்லை. ஓரிடத்தில் கூட அவர் முகம் சுளித்தது கிடையாது. தொழில் தர்மம், அர்ப்பணிப்பு என எந்த வேலை செய்தாலும் அவரிடம் இருக்கும் என்று கூறி இருந்தார். இப்படி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அளித்திருந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம்:

தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் கமலஹாசன் தயாரிப்பில் உருவாக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை துவங்கியது.கூடிய விரைவில் இந்த படத்தின் பெயர் போஸ்டர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement