தர்ஷனிடம் ஷெரின் கிழித்து போட்ட கடிதம் குறித்து கேட்ட கமல்.! தர்ஷன் சொன்ன பதில்.!

0
1930
sherin
- Advertisement -

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 5 போட்டியாளர்களே மீதமுள்ள நிலையில் முகென் மட்டும் ஏற்கனவே இறுதி போட்டிக்கு நேரடியா தகுதி பெற்று இருக்கிறார். அதே போல இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேட் ஆகியிருந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கவின் பிக் பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசு தொகையை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து விலகியதால் ரசிகர்கள் பெரும் ஷாக்கடைந்தனர். இதனால் தர்ஷன் ஷெரின் லாஸ்லியா சாண்டி ஆகிய நான்கு பேர் மட்டும் நாமினேஷனில் இருந்து வந்தனர் .

- Advertisement -

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் சாண்டி காப்பாற்றபட்டதாக கமல் அறிவித்தார் . கவின் வெளியேறுவதற்கு முன்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவில் வழக்கம்போல கவின் தான் முதலிடத்தில் இருந்து வந்தார். அவரை தொடர்ந்து சாண்டி இரண்டாவது இடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் , சாண்டியை தவிர மீதமுள்ள லாஸ்லியா, ஷெரின் தர்ஷன் ஆகிய மூவரில் இன்று முதலில் கமல் யாரை காப்பாற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இறுதி ப்ரோமோவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷெரின் தர்ஷனுக்கு எழுதிய கடிதத்தை குறித்து கேட்டுள்ளார் கமல்.

-விளம்பரம்-
Advertisement