லாஸ்லியாவுடன் காதல் ? முதன் முறையாக பதில் அளித்த கவின்.. ஷாக்கில் ரசிகர்கள்..

0
53994
kavin-losliya

தமிழில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக பண்டிகை போல சிறப்பாக முடிவடைந்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பல பிரபலமானதற்கு முக்கியமான காரணம் என்று பார்த்தால் கலவரங்கள் ,காதல்கள் , சண்டைகள்,சர்ச்சைகள் என பயங்கரமாக வீடே களை கட்டியது. இந்த சீசனில் 16 போட்டியாளர்கள்,90 கேமராக்கள் என பிக் பாஸ் செட்டு பட்டைய கிளப்பியது. வழக்கம் போல் இந்த பிக்பாஸ் சீசன் 3ன் தொகுப்பாளர் நம்ம “உலகநாயகன் கமல்ஹசன்” தாங்க. மேலும்,முகென் தன்னுடைய வீடா முயற்சியாலும், தன் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடி பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆனார்.மேலும்,இரண்டாம் இடத்தை சாண்டியும்,மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்து உள்ளார்கள்.

Image result for kavin losliya

விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சிறப்பாக முடிவடைந்தத நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள். அதோடு இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட வேற லெவல்ல இருந்தது கூட சொல்லலாம். ஏன்னா அந்த அளவிற்கு மாஸ் காட்டுச்சி. அது மட்டும் இல்லைங்க அந்த ரெண்டு சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 3க்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகம். அதோடு இந்த பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சி இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர்களையும் ஈர்த்தது என்று கூட சொல்லலாம். இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு வெற்றி பெற்றதற்கு காரணம் என்று பார்த்தால் அது கவின் ,லாஸ்லியா காதல் தான். மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிட்டாக காரணம் பல காதல் காவியங்கள் என்று கூறலாம். அதுமட்டுமில்லைங்க “கவிலியா” என்ற ஹாஸ்டேக் ஒன்றை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி ரசிகர்கள் கவின், லாஸ்லியா குறித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.இப்போது கூட இதுதான் ட்ரெண்டிங் நியூஸ் ஆக இருக்கிறது.

இதையும் பாருங்க : இரண்டாம் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன்.. அந்த தியாகி இவர் தானாம்..

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனேயே பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெறும். அதேமாதிரி பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டதின் படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், இதில் பிக்பாஸில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவரும் பங்குபெற உள்ளார்கள். அதோட பாய்ஸ் அணியை சந்திக்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தில் மேடையில் முகென் பாடியுள்ளார் என்றும், லாஸ்லியா நடனம் ஆடி உள்ளார், கவினும் நடனமாடியுள்ளார். இவர்களோடு தர்சன் மற்றும் ஷெரின் இருவரும் சேர்ந்து நடனம் ஆடி உள்ளார்கள். இவர்களைப் போலவே கஸ்தூரியும் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஒரு கலக்கு கலக்கி உள்ளார் என்று கூட சொல்லலாம். மேலும், அவர் மேடையில் பேசும்போது கவின் இடம் லாஸ்லியாவின் காதல் பற்றி என்ன முடிவெடுத்து இருக்கீங்க? என்று கேட்டார். உடனே அனைவரும் எதிர்பார்க்காத பதிலை கவின் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : என்னை சீரழத்தது இந்த நடிகர் தான்.. இறுதியில் போட்டுடைத்த நடிகை ஆண்ட்ரியா..

Image result for kavin losliya
Image result for kavin losliya

கவின் கூறியது , எனக்குன்னு சில கடமைகள் உள்ளது. அதனால் எனக்கு மற்றதை பற்றி எல்லாம் நினைக்க நேரமில்லை என்று கூறிய பதில் ரசிகர்களை அதிர வைத்தது. கவின்,லாஸ்லியாவை விட ரசிகர்கள் தான் இவர்கள் இருவரும் சேர வேண்டும் என அதிகம் ஆசைப்பட்டார்கள். ஆனால், திடீரென்று கவின் பதிலை கேட்டு ரசிகர்கள் மனம் உடைந்து போனார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் தான் முழுவதுமாக தெரியும். எதற்காக? அப்படி பேசினார் கவின்.

-விளம்பரம்-
Advertisement