விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் மிகவும் பரபரப்பாக நிறைவடைந்தது இந்த சீசனில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் அதில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்களும் இருந்து வந்தனர். அதில் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான நபராக இருந்தவர் தான் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகளின் மனதைக் கொள்ளை கொண்டவர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக இவர் நட்புனா என்ன தெரியுமா என்ற படத்திலும் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கலந்துகொண்ட கவினுக்கு அவர் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களின் ஆதரவுகள் இருந்து வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே கவினுக்கு ஆதரவாக இருந்து வந்த ரசிகர்கள் கவின் எத்தனை முறை நாமினேஷனில் இடம் பெற்றாலும், அவரை ஆதரித்து அவருக்கு வாக்குகளை அள்ளி வீசி வந்தன.ர் இதனால் கவின் பிக்பாஸ் பட்டத்தை கண்டிப்பாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் சந்தித்த சில பிரச்சனைகளால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது அவரது தாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்த கவின் இறுதிப் போட்டிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னதாக பிக்பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
கவின் வெளியேறி இருந்தது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் இந்த நிகழ்ச்சி மூலமாக பெற்ற பணத்தின் மூலம் சிறையிலிருந்த தனது தாயை மீட்டு வந்தார் சமீபத்தில் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் கவின் மேலும் பணம் மற்றும் புகழுக்காக தான் தான் பிக்பாஸ் வீட்டில் அங்கு பெற்றதாகவும் அது தற்போது தனக்கு கிடைத்துள்ளதாகவும் கவின் தெரிவித்திருந்தார். இருப்பினும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தனக்கு கிடைத்த இந்த சந்தோஷத்தை தன்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார். கவினும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து கொஞ்சம் குடும்ப பிரச்சினைகளை தீர்த்து தற்போது தான் நண்பர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் கவினை வைத்து நட்புனா என்ன தெரியுமா படத்தை இயக்கிய சிவா அரவிந்த், கவினை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் பலருக்கும் பலவிதமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது நிகழ்ச்சியின் பட்டத்தை வென்ற மலேசியாவை சேர்ந்த முகெனுக்கு தற்போது தமிழ் நாட்டிலும் பெரும் பிரபலம் கிடைத்துள்ளது. அதேபோல இலங்கையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதர்சனுக்கு கமல், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட திறமைசாலி என்ற முத்திரையையும் கொடுத்திருக்கிறார். இதனால் தர்ஷன் எதிர்காலத்தில் வரும்கமலின் ஏதாவது ஒரு படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கவினுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படவாய்ப்புகள் ஏதாவது வந்ததா இல்லையா என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கவினை இயக்குனர் சிவா அரவிந்த் சந்தித்துள்ளது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. ஆனால், இது தனிப்பட்ட சந்திப்பு அல்லது கவின் நடிக்கப் போகும் அடுத்த படத்திற்கான சந்திப்பா என்பது ஊர்ஜிதமாகவில்லை.